ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக உயிரழப்புகள் ஏதுவும் ஏற்பட்டிருக்கலாம் எனவும் ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு போராளிகள் குழுவும் தற்போது வரை பொறுப்பேற்க்கவில்லை.

அரசாங்கத்தால் நடத்தப்படும் பாதுகாப்பு பல்கலைக்கழகமான மார்ஷல் பாஹிம் என்ற இராணுவ பயிற்சிக் கல்லூரியின்  நுழைவாயிலிலே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

எனினும் இதனால் உண்டான உயிர் சேதங்கள் எதுவும் இதுவரை வெளியாவில்லை.

அமெரிக்காவுன் தலிபானிய இஸ்லாமிய போராளிகளும் சமாதான உடன்படிக்கையை முன்னெடுக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் வேளையில், அண்மைக் காலமாக ஆப்கானிஸ்தானில் பொலிஸார் மீதும், அமெரிக்க  படையினர் மீதும் அடிக்கடி தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு வெளியே இதுபோன்ற ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்டதில் ஆறு பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.