நாட்டில் டெங்கு ஒழிப்புக்காக விசேட பக்றீரியாவை எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி முதல் உபயோகிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  

இதற்கிணங்க சர்வதேச நாடுகளில் டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கு உபயோகத்திலுள்ள பக்றீரியாவான வோல்பெகியா பக்றீரியாவை இலங்கையில் உபயோகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பக்றீரியாவை சுற்றாடலில் விடுவிப்பதற்கு சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு திட்டமிட்டுள்ளதுடன் இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் நுகேகொடை உள்ளிட்ட பிரதேசங்களில் 25 கிராமசேவகர் பிரிவுகளில் வோல்பெகியா பக்றீரியாவை சுற்றாடலில் விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.