கடந்த  டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி  சீனாவின் வுஹான்   நகரில்  ஒரு நோயா­ளியை பரி­சோ­தித்த வைத்­தியர் லீ தனது வைத்­திய நண்­பர்­க­ளுக்கு ஒரு தக­வலை அனுப்­பி­யி­ருந்தார். அதில்  சார்ஸ் தொற்­றைப்­போன்­ற­தொரு தொற்­றுநோய்  பர­வு­வ­தா­கவும்  எனவே  விழிப்­புடன் இருக்­க­வேண்டும் என்றும் அவர் அந்த செய்­தியில் குறிப்­பிட்­டி­ருந்தார்.  இந்தத் தகவல் பர­வி­யதை அடுத்து வுஹான் பாது­காப்பு தரப்­பி­னரால்  எச்­ச­ரிக்­கப்­பட்ட வைத்­தியர் லீ தவ­றான தக­வல்­களை பரப்­பக்­கூ­டாது என பணிக்­கப்­பட்­ட­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் தெரி­வித்­தி­ருந்­தன. எனினும் இறு­தியில் அந்த வைத்­தி­யரே  கொரோனா வைரஸ் தொற்­றுக்கு உள்­ளாகி தற்­போது உயி­ரி­ழந்­தி­ருக்­கின்றார்  

ஒரு­நோ­யாளர்  அல்­லது   இந்த வைர­ஸுக்­கான அறி­கு­றிகள் தென்­படும் ஒருவர்   முக­ க­வசம் அணி­யலாம்.  அதே­போன்று  நோயா­ளி­களை அருகில் இருந்து பரா­ம­ரிக்­கின்­ற­வர்கள்.  வைத்­தி­யர்கள்,  தாதி­மார்கள், ரசா­ய­னக்­கூ­டங்­களில் பணி­யாற்­று­ப­வர்கள் ஆகியோர்   முக­ க­வ­சங்­களை அணி­வது நல்­ல­தாகும். மாறாக   பொது­வாக போக்­கு­வ­ரத்­தின்­போதும்   அலு­வ­லகங்­களில் முக­ க­வசம் அணி­ய­வேண்டும் என்ற அவ­சி­ய­மில்லை. ஆனால்  கைகளை எப்­போதும் சவர்க்­கா­ர­மிட்டு கழு­விக்­கொள்­வது  மிகவும் அவ­சி­ய­மாகும்

சமு­தாய வைத்­திய நிபுணர் கேசவன் 

உலக நாடு­களை  அச்­சு­றுத்­திக்­கொண்­டி­ருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பில் முதன்­மு­தலில்  தனது நண்­பர்­க­ளுக்கு  தகவல் அனுப்பி சர்ச்­சைக்­குள்­ளாகி பின்னர்  அந்த வைரஸ்  நோய் தொற்­றுக்­குள்­ளான சீனாவைச் சேர்ந்த  வைத்­தியர்   லீ உயி­ரி­ழந்­து­விட்டார்.   கடந்த  டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி  சீனாவின் வுஹான்   நகரில்  ஒரு நோயா­ளியை பரி­சோ­தித்த வைத்­தியர் லீ    தனது வைத்­திய நண்­பர்­க­ளுக்கு ஒரு தக­வலை அனுப்­பி­யி­ருந்தார். அதில்  சார்ஸ் தொற்­றைப் ­போன்­ற­தொரு தொற்­றுநோய்  பர­வு­வ­தா­கவும்  எனவே  விழிப்­புடன் இருக்­க­வேண்டும் என்றும் அவர் அந்த செய்­தியை குறிப்­பிட்­டி­ருந்தார்.  இந்த தகவல் பர­வி­யதை அடுத்து வுஹான் பாது­காப்பு தரப்­பி­னரால்  எச்­ச­ரிக்­கப்­பட்ட  0வைத்­தியர் லீ தவ­றான தக­வல்­களை பரப்­பக்­கூ­டாது என பணிக்­கப்­பட்டார். 

டாக்டர்  லீயும் அதனை ஏற்­றுக்­கொண்­டு­விட்டு  தனது வழ­மை­யான மருத்­து­வப்­ப­ணி­களில் ஈடு­பட்டார். எனினும் பின்னர் வுஹான் வைத்­தி­ய­சா­லையில் அவ­ருக்கு கொரோனா  வைரஸ் தொற்று ஏற்­பட்­டது.    தொடர்ந்து இந்த விடயம்   நெருக்­க­டி­யான நிலைக்கு வந்த பின்னர்  வுஹான் நகர பாது­காப்பு தரப்­பினர்  வைத்­தியர் லீயிடம் வருத்தம் தெரி­வித்­தி­ருந்­த­தாக  சர்­வ­தேச செய்­திகள்  தெரி­வித்­தி­ருந்­தன. எனினும்   அப்­போது நிலைமை  மோச­மான கட்­டத்தை அடைந்­தி­ருந்­தது.  

எப்­ப­டி­யி­ருப்­பினும்   வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை 2.58 அளவில் வைத்­தி­ய­சா­லை யில் கொரோனா வைரஸ் கார­ண­மாக   இந்த தொற்று தொடர்பில் முதலில் எச்­ச­ரிக்கை விடுத்த  வைத்­தியர் லீ உயி­ரி­ழந்தார். இந்த உயி­ரி­ழப்பு சம்­ப­வ­மா­னது உலக மக்கள் மத்­தி­யிலும்  பாரி­ய­தொரு வேத­னையை கொடுத்­தி­ருக்­கி­றது. 

600 க்கும்  மேற்­பட்டோர் உயி­ரி­ழப்பு 

வைத்­தியர் லீ போன்ற  வைத்­தி­யர்­களே  உல­கிற்கு அதிகம் தேவைப்­ப­டு­கின்­றனர் என்ற  கருத்­துக்­களும் பர­வ­லாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.  34 வய­தான  வைத்­தியர் லீ    டிசம்பர் 30 ஆம்­ தி­க­தியே இந்த எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருக்­கின்றார். அவரின் உயி­ரி­ழப்பு மருத்­துவ உல­கிற்கு பாரிய  இழப்பு என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்­கி­ட­மில்லை.  எப்­ப­டி­யி­ருப்­பினும் தற்­போது கொரோனா வைரஸ் தொற்றின்  தாக்கம்  வேக­ம­டைந்து வரு­வ­தா­கவே தெரி­கின்­றது.  இது­வரை  31161 பேருக்கு  இந்த தொற்று   பர­வி­யுள்­ள­துடன் 639பேர்   உயி­ரி­ழந்­துள்­ளனர்.   வியா­ழக்­கி­ழமை தினத்­தன்று மட்டும் 73  பேர்  உயி­ரி­ழந்­துள்­ளனர்.  

25 நாடு­க­ளுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று பர­வி­யி­ருக்­கி­றது.   சீனா­வுக்கு வெளியே இரண்டு உயி­ரி­ழப்­புக்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. ஹொங்கொங் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடு­களில் இருவர் உயி­ரி­ழந்­தனர்.  

இவ்­வாறு  இந்த கொரோனா வைரஸ் தொற்­றா­னது  முழு உல­கையும் அச்­சு­றுத்தும் நோயாக உரு­வெ­டுத்­தி­ருக்­கி­றது.   நோய் தொற்­றுக்கு  உள­ளா­கின்­ற­வர்கள் குண­ம­டைந்து வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.   இறக்­கின்ற வீதம் மிகவும் குறை­வாக இருக்­கின்­றது. இதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு சார்ஸ் என்ற  வைரஸ் தொற்று பர­வி­ய­போது  இறப்­புக்கள் 10 வீத­மாக இருந்­தன. இம்­முறை அது   2 வீத­மாக இருப்­ப­தாக  சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. 

தென்­பட்டால் வைத்­தி­யரை நாடுங்கள்  

கொரோனா வைரஸ் தொற்று  ஏற்­பட்­டி­ருப்பின் காய்ச்சல்  இருமல், மற்றும் மூச்­சுத்­தி­ணறல் அறி­கு­றி­க­ளாக இருக்கும் என அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. எனவே அவ்­வாறு   உணர்­கின்­ற­வர்கள்  உட­ன­டி­யாக  வைத்­தி­யரை நாடு­வது சிறந்­தது என்று அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.   உலக சுகா­தார ஸ்தாப­னமும் இது­தொ­டர்­பாக பல அறி­வு­றுத்­தல்­களை வெளி­யிட்­டி­ருக்­கி­றது.   உமிழ்நீர் துகல்கள் மூல­மா­கவே   இந்த நோய் பர­வு­வ­தாக   கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. ஒருவர் இருமும் போது  குறிப்­பிட்­ட­ளவு  தூரத்துக்கு உமிழ் நீர்­த்து­கல்கள் செல்­கின்­றன.  அவை  இன்­னொரு  மனி­த­ருக்குப் பரவும் அபா­யத்தை கொண்­டி­ருக்­கின்­றன. என­வேதான் அவ்­வாறு  இருமல்   வரும்­போது அல்­லது   அடிக்­கடி இரு­மிக்­கொண்­டி­ருப்­ப­வர்கள் முக­க்க­வ­சத்தை பயன்­ப­டுத்­து­மாறு  அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றது. நோய் அறி­குறி தென்­பட்டால்  முகக்­க­வசம் பாவிக்­கு­மாறு  கூறப்­ப­டு­கின்­றது.  எப்­ப­டி­யி­ருப்­பினும்   அடிக்­கடி சவர்க்­கா­ர­மிட்டு கைகளைக் கழு­விக்­கொண்­டி­ருப்­பது  இந்த நோய் பர­வாமல் இருப்­ப­தற்கு   மிக சிறந்த வழி­யென மருத்­துவ நிபு­ணர்கள்  சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். 

கைகளை சவர்க்­கா­ர­மிட்டு கழு­வுங்கள்  

கைகளை  அடிக்­கடி சவர்க்­கா­ர­மிட்டு  கழு­வு­வதன் மூலமே  மக்கள்   இந்த கொரோனா வைரஸ் தாக்­கத்­தி­லி­ருந்து தம்மை பாது­காத்­துக்­கொள்ள முடியும்.  எனவே பொது­மக்கள் வீணாக அச்­சப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­காமல் தாம்  சுத்­த­மாக இருப்­பதை  உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­வது மிக சிறந்­த­தாக   அமையும்.   

இது இவ்­வா­றி­ருக்க இலங்­கையில் இது­வரை ஒருவர்  இந்த கொரோனா வைரஸ்  தொற்று ஏற்­பட்ட  நிலையில் அடை­யாளம் காணப்­பட்டு சிகிச்சை அளிக்­கப்­பட்டார். அவர் தற்­போது முழு­மை­யாக குண­ம­டைந்­தி­ருப்­ப­தாக  ஐ.டி.எச். மருத்­து­வ­மனை அதி­கா­ரிகள் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். எனினும் அவர் தொடர்ந்தும்  வைத்­தி­ய­சா­லை­யி­லேயே தங்­கி­யி­ருக்­கின்றார்.  அவர் மீண்டும் சீனா­வுக்கு பய­ணிப்­ப­தற்­கான உடல் தகு­தியை   பெற்­றதும் அவர்  வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து செல்வார் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இலங்­கையின் நிலை

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விட­யத்தில்  இலங்கை சுகா­தா­ரத்­து­றை­யினர் பாரிய  முயற்­சியில்  ஈடு­பட்­டுள்­ளனர். இது­வரை ஒரு­வரே அடை­யாளம் காணப்­பட்டார்.  அவரும் தற்­போது பூர­ண­மாக குண­ம­டைந்­தி­ருக்­கின்றார். பர­வாமல் தடுப்­ப­தற்­கான வழி­மு­றைகள்    கூறப்­பட்டு வரு­கின்­றன.  எனவே மக்கள் அவை தொடர்பில் மிகவும்  அவ­தா­னத்­துடன் இருக்­க­வேண்டும்.  அது­மட்­டு­மன்றி   கட்­டு­நா­யக்க   சர்­வ­தேச விமான நிலையம், மற்றும் பலாலி  விமான நிலையம் என்­ப­வற்றில் பய­ணி­களை பரி­சோ­தனை செய்­வ­தற்கு  முறை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக  அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. விமான நிலை­யங்கள் மற்றும் துறை­மு­கங்கள்  ஊடாக இந்த கொரோனா வைரஸ் தொற்று  பர­வ­ாமல் இருப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை அறி­வித்­துள்­ளது. 

  17 மணி­நேர நட­வ­டிக்கை 

 சீனாவின் வுஹான் நகரில் சிக்­கி­யி­ருந்த இலங்கை மாண­வர்கள் 34 பேர் கடந்த சனிக்­கி­ழமை இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்­டனர்.   அவர்கள் 33 பேரும்   தற்­போது ரா­ணுவ முகாமில்  அமைக்­கப்­பட்­டுள்ள  விசேட வைத்­தி­யப்­பி­ரிவில்  தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு   சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் யாருக்கும்  கொரோனா வைரஸ் தொற்று இருப்­பது இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என  வைத்­தி­யர்கள் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். 

எனினும் 14 தினங்கள்  அவர்கள் கண்­கா­ணிக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­யுள்­ளது. இவர்­களை அழைத்து வரு­வதில் ஸ்ரீ­லங்கன்  எயார்லைன்ஸ்  உத்­தி­யோ­கத்­தர்கள்  வெளிக்­காட்­டிய அர்ப்­ப­ணிப்பு மிகவும்  முக்­கி­யத்­து­வ­மிக்­கது. பல்­வேறு  நெருக்­க­டி­க­ளுக்கும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் மத்­தியில்  ஸ்ரீ­லங்கன்  எயார்­லைனஸ் உத்­தி­யோ­கத்­தர்கள்   வுஹா                                                            00ன் நக­ருக்குச் சென்று   இலங்கை மாண­வர்­களை மீட்டு வந்­தனர்.  அப்­போ­தைய நேரத்தில் இலங்­கையே வுஹா­னுக்கு சென்று தனது நாட்டு மாண­வர்­களை மீட்­டு­வந்த உலகின் நான்­கா­வது நாடாக   பார்க்­கப்­பட்­டது.  இந்த விட­யத்தில்   சீனாவின்  அதி­கா­ரிகள் வழங்­கிய ஒத்­து­ழைப்பும் மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­கது.   

சீன தூது­வரின் ஆதங்கம்  

நிலைமை இவ்­வாறு இருக்­கின்ற சூழலில் அண்­மையில்  இலங்­கை­யி­லுள்ள சீனத்­தூ­துவர்  வருத்­தத்­துடன் கூடிய ஒரு அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்தார். அதா­வது நெருக்­கடி மிக்க இந்த நேரத்தில் இலங்­கை­யி­லுள்ள   சீனப்­பி­ர­ஜை­களை  உண­வ­கங்­க­ளிலும் பொது­போக்­கு­வ­ரத்­து­க­ளிலும்  புறக்­க­ணிக்­க­வேண்டாம் என்று  சீனத்­தூ­துவர் மிகவும் உருக்­க­மாக  கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.   ஆபத்­தான நேரத்தில் உத­வு­வதே மனி­தா­பி­மா­னத்தின் உச்ச நிலை என்ற தொனி­யிலும் சீனத்­தூ­துவர் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். 

 உண்­மையில்  இந்த கொரோனா வைரஸ் தொற்று எவ்­வாறு பர­வு­கின்­றது என்ற  விளக்கம்  மருத்­துவ ரீதியில்  தெளி­வான முறையில் அளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.  எனவே இது தொடர்பில்  வீணாக  அச்­ச­ம­டைய வேண்­டி­ய­தில்லை.  யாரையும்  புறக்­க­ணிக்­க­வேண்­டிய அவ­சி­யமும் இல்லை.  பொது­வாக  அனை­வரும் மனி­தா­பி­மான ரீதியில் நடந்­து­கொள்­வதே  மிகவும் அவ­சி­ய­மாக இருக்­கின்­றது. 

வைத்­திய நிபுணர் கேசவன் 

இந்த சூழலில்   நாம் எவ்­வாறு  எம்மை  பாது­காத்­துக்­கொள்­ள­வேண்டும் என்­பது தொடர்­பாக    சமு­தாய வைத்­திய நிபுணர் டாக்டர்  கேசவன்   கேச­ரிக்கு கருத்து பகிர்­கையில், 

“இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பில் மக்கள்  அநா­வ­சி­ய­மாக  பயப்­ப­ட­வேண்­டி­ய­தில்லை பதற்­ற­ம­டை­ய­ வேண்­டி­ய­து­மில்லை. ஆனால் விழிப்­பு­ணர்­வுடன் இருப்­பது மிகவும் அவ­சி­ய­மா­னது.  முக்­கி­ய­மாக  இந்த  கொரோனா வைரஸ் நோய் தொற்­றினால் இரண்டு  வாரங்­க­ளுக்­குள்­ளேயே அதன் அறி­கு­றிகள் வெளிப்­படும்.  என­வேதான்  நாம் மிகவும் கவ­ன­மாக இருக்­க­வேண்­டி­யுள்­ளது. 

எப்­ப­டி­யி­ருப்­பினும் இந்த வைரஸ் தொற்று ஆரம்­பித்­ததி­லி­ருந்து தற்­போ­து­வரை இலங்­கை­யா­னது சிறந்த  விழிப்­பு­ணர்­வு­டனும்  ஆயத்­தத்­து­டனும் செயற்­பட்டு வரு­கின்­றது.  இது­வரை அந்த  தொழில்­ப­டு ­நி­லை­மையில் எவ்­வித பின்­ன­டைவும் இல்­லாமல் இலங்­கையின் சுகா­தா­ர­த்துறை செயற்­பட்டு வரு­கின்­றது.  இதே­வேளை  வட­மா­கா­ணத்தில்  யாழ். வைத்­தி­ய­சா­லையில்  கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தனிப்­பி­ரிவு ஒன்று உரு­வாக்­கப்­பட்டு அதற்­கான வைத்­தி­யர்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். தனிப்  பிரி­வொன்றை உரு­வாக்கி  தேவை­யான அனைத்து ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ளன.  எனவே வட­மா­கா­ணத்தில் எங்­கா­வது ஓர் இடத்தில்    யாருக்­கா­வது  கொரோனா வைர­ஸுக்­கான அறி­கு­றிகள் தென்­பட்டால் உட­ன­டி­யாக  அவர்   யாழ்ப்­பா­ணத்தில் குறித்த தனிப்­பி­ரி­விற்கு சென்று  பரி­சோ­தனை செய்­து­கொள்­ளலாம். 

இல்­லா­விடின் வட­மா­கா­ணத்தின் எந்­த­வொரு  வைத்­தி­ய­சா­லை­யி­லா­வது யாரா­வது ஒரு நோயா­ள­ருக்கு  இது தொடர்­பான அறி­கு­றிகள் தென்­பட்டால், குறித்த வைத்­தி­ய­சா­லையின் டாக்­டர்கள்   யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையின் சம்­பந்­தப்­பட்ட தனிப்­பி­ரி­வுக்கு அறி­வித்தால், அவர்  அதற்­கான ஏற்­பா­டு­களைச் செய்து சம்­பந்­தப்­பட்ட நோயா­ளர்­களை அழைப்­பிக்க நட­வ­டிக்கை எடுப்­பார்கள். கொரோனா வைரஸ் தொற்­றுநோய் அறி­கு­றிகள் தென்­படும் பட்­சத்தில் அவர் எவ்­வாறு யாழ்.  வைத்­தி­ய­சா­லைக்கு வர­வேண்டும்.   அவ­ரது போக்­கு­வ­ரத்து எவ்­வாறு அமையும் என்­பது தொடர்­பான அனைத்து ஏற்­பா­டு­களும்   ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளன. வட­மா­கா­ணத்­தி­லேயே  யாழ். மாகா­ணத்தில் மட்­டுமே   தனிப்­பி­ரிவு உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.    இதற்­காக வைத்­திய நிபு­ணர்­களும்   உயர் அதி­கா­ரி­களும்  நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.  

உதா­ர­ண­மாக  வவு­னியா வைத்­தி­ய­சா­லையில்  நோயாளர் ஒரு­வ­ருக்கு   இந்த தொற்று குறித்த அறி­கு­றிகள் தென்­பட்டால்  அது தொடர்பில் உட­ன­டி­யாக  யாழ். வைத்­தி­ய­சா­லைக்கு அறி­விக்­க­வேண்டும்.  அதன்­பின்னர்   யாழ். வைத்­தி­ய­சாலை  தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும்.   இதே­வேளை  பலாலி விமா­ன­நி­லை­யத்­திலும் பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.   அதே­வேளை பலா­லி­ வி­மான நிலையம் ஊடாக  வரு­கின்ற பய­ணிகள் உரிய  பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள். அது­மட்­டு­மன்றி  அந்­தப்­ப­ய­ணிகள் எங்­கெங்கு பய­ணிக்க  உள்­ளார்கள் என்ற  தக­வல்­களும் விண்­ணப்­பங்கள் ஊடாக பெறப்­படும். அதன்­படி   அவர்கள் பய­ணிக்கும் இடங்கள் கண்­கா­ணிக்­கப்­படும்.  இவ்­வாறு வட­மா­கா­ணத்­திலும் அனைத்து ஏற்­பா­டு­களும் சரி­யான முறையில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. எனவே மக்கள்  வீணாக அச்­ச­ம­டை­ய­ வேண்டாம். ஆனால் விழிப்­பு­ணர்­வு­டனும்  சுத்­த­மா­கவும்   இருப்­பது அவ­சி­ய­மா­கின்­றது. 

முக­ க­வசம் அணி­ய­வேண்­டுமா என பலர் கேட்­கின்­றனர்.  ஒரு­நோ­யாளர்  அல்­லது   இந்த வைர­ஸுக்­கான அறி­கு­றிகள் தென்­படும் ஒருவர்   முக ­க­வசம் அணி­யலாம்.  அதே­போன்று  நோயா­ளி­களை அருகில் இருந்து பரா­ம­ரிக்­கின்­ற­வர்கள்.  வைத்­தி­யர்கள்,  தாதி­மார்கள், ர­சா­ய­னக்­கூ­டங்­களில் பணி­யாற்­று­ப­வர்கள் ஆகியோர்   முக­ க­வ­சங்­களை அணி­வது நல்­ல­தாகும். மாறாக    பொதுவாக போக்குவரத்தின்போதும்   அலுவலகங்களில் முக கவசம் அணியவேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால்  கைகளை எப்போதும் சவர்க்காரமிட்டு கழுவிக்கொள்வது  மிகவும் அவசியமாகும்.  அடிக்கடி  கைகளை    சவர்க்காரமிட்டு கழுவுங்கள்” என்று குறிப்பிட்டார். 

வழிமுறைகளை பின்பற்றுங்கள் 

அந்த வகையில்  நாம்  எவ்வாறு  பாதுகாப்பாக  இருக்கவேண்டும் என்பது தொடர்பாக  மிகவும் தெளிவான விளக்கங்கள்  சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன. 

அதேபோன்று உலக சுகாதார ஸ்தாபனமும் மிகவும் தெளிவான முறையில்   அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கின்றது.   எனவே  வீண் அச்சம் கொள்ளாமல்  பாதுகாப்பான முறையிலும்  விழிப்புணர்வுடன் இருப்பது  தற்போதைய சூழலில்  மிகவும் சிறந்ததாக அமையும்.   முக கவசம் அணிவது தொடர்பில் பலர்  குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் எவ்வாறான சூழலில்  முக கவசம் அணியவேண்டும் என்பது தொடர்பாக சுகாதார அமைச்சு சரியான  அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.  

இந்த கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்றதும் நுரையீரலைத் தாக்குவதாகவும்   அதன் பின்னர்  நிமோனியா    ஏற்படுவதாகவும்   அதனாலேயே   உயிரிழக்கும் அபாயம் ஏற்படுவதாகவும்  வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் முடியுமானவரை நாம் அடிக்கடி கைகளைக் கழுவிக்கொண்டு சுத்தமாகவும் விழிப்பாகவும் இருப்பது மிகவும் அவசியமாகிறது. இந்த வைரஸ் தொடர்பில்  நாம்  விழிப்புணர்வுடன் இருப்பதே அதிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான சிறந்த வழியாக இருக்கின்றது. எனவே சுகாதார அமைச்சினதும்      உலக சுகாதார ஸ்தாபனத்தினதும்  அறிவுரைகளை மிகச் சரியாக  கடைப்பிடிக்கவேண்டியது  அனைவரதும் கடமையாகும். 

ரொபட் அன்­டனி