யாழ்ப்பாணம் தீவகம் வேலணை கிழக்கு பகுதியான அராலித் துறையில் கடற்தொழில் செய்வதற்கு அனுமதிக்குமாறு ஊர்காவற்துறை கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலணை கிழக்கு பகுதியான அராலிதுறையில் கடற்படை மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் முகாமிட்டு இருப்பதனால் பாரம்பரிய தொழிலில் இடுபட்டுவரும் கடற்தொழிலாளர் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.இவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதாயின் நீண்ட கடல் மைல் தூரம் சுற்றியே தொழில் செய்யவேண்டிய நிலையுள்ளது.
நீண்டகாலமாக இப்பகுதியில் தொழில் செய்வதற்கு தொடர்ச்சியாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையிலும் சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. குறித்த கடற்பகுதியில் பாரம்பரியத் தொழில் முறையில் சிறு தொழில் முயற்சியே இக்கடலில் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக வீச்சு வலை முரல் வலை கோர் வலை போன்றதொழில்களே இப்பகுதியி மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்தத் தொழில் முறையானது எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத முறையிலேயே இந்த தொழிலை மேற்கொண்டு வருகின்றார்கள். நீண்ட காலமாக கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் இப் பகுதியில் நிலைகொண்டிருப்பதால் குறித்த தொழிலைச் செய்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். சுமார் 100 குடும்பங்கள் வரையில் இந்தப் பாதிப்பை சந்தித்தவண்ணமுள்ளார்கள்.
இந்தப் பகுதியில் தம்பாட்டி சின்னமடு வேலணை சாட்டி பகுதிகளைச் சேர்ந்த சிறுகடல் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் எனவே இவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு குறித்த பகுதியில் தொழில் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM