சென்னையில் ஏற்பட்டிருந்த வெள்ளத்தின் காரணமாக, இலங்கைக்கு திரும்ப முடியாதுள்ள இலங்கை யாத்திரிகர்களை அழைத்துவர சிறிலங்கன் எயார்லைன்ஸ் இன்று விசேட விமானம் ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.

புத்தகாயா வழிபாட்டுக்கு சென்ற 120 இலங்கை யாத்திரிகர்களை அழைத்து வருவதாக குறித்த விமானம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அதேநேரம், சென்னையில் ஏற்பட்டிருந்த கடுமையான வெள்ள நிலைமை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.