அரலங்வில பகுதியில்  பொலிஸார் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கைளின் போது டி - 56 ரக துப்பாக்கி ரவைகள் 135, மெகசின்கள் 4 ஆகியன பொலன்னறுவை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கும்புருயாய  என்ற இடத்தில்உரைப் பையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த கொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.