எயார் பஸ் விமான நிறு­வ­னத்­திற்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்: முன்னாள் பிர­தமர்

Published By: J.G.Stephan

10 Feb, 2020 | 11:07 AM
image

எயார் பஸ்  விமான  கொள்­வ­ன­விற்­காக இலங்­கைக்கு இலஞ்சம்   வழங்­கி­யுள்ள எயார் பஸ் விமான  நிறு­வ­னத்­திற்கு எதி­ராக வழக்கு தொடர முடியும். இவ்­வி­வ­கா­ரத்தில்  எமது முன்னைய அர­சாங்கம் உரிய  நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தது  என  முன்னாள் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று முன்­தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில் 

இந்த கொள்­வ­னவில் மோச­டிகள் இடம் பெற்­றுள்­ள­தாக   கடந்த 2016ஆம் ஆண்டே   தெரிய வந்­தது.  இதன் பின்­னரே  குற்­றப்­பு­னாய்வு பிரிவு  விசா­ரணை  நட­வ­டிக்­கை­களை  மேற்­கொண்­டது. ஒரு  சில­ரது   பெயர்  பட்­டியல் கிடைக்கப் பெற்­றதன் பின்னர்   அவர்­களின் வெளி­நாட்டு   பய­ணங்­க­ளுக்கும்   சட்­ட­மா­திபர் திணைக்­க­ளத்தின் ஊடாக  தடை விதிக்­கப்­பட்­டன.

இம்­மோ­ச­டிகள் குறித்து   2017ஆம் ஆண்டு   அறிக்கை கோரி­யி­ருந்த போதும் சிங்­கப்பூர்    அதி­கா­ரிகள் கடந்த  நவம்பர் மாதமே  முழு அறிக்­கை­யி­னையும் ஒ ப்படைத்­தார்கள்.  அக்­கா­லக்­கட்­டத்தில் தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டன.  

 இலங்­கையில் ஒரு நிறு­வ­னத்­திற்கு  மாத்­திரம் 20  இலட்சம்  டொலர் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்­றத்­துக்கும், அர­சாங்­காத்­துக்கும் இவ்­வி­டயம் குறித்து ஆராய்­வ­தற்­கான பொறுப்பு  காணப்­ப­டு­கின்­றன. முறைக்­கே­டுகள் எவ்­வாறு இடம் பெற்­றன, யார் தொடர்­பு­டை­ய­வர்கள் என்­பது குறித்து ஆரா­யப்­ப­ட­வேண்டும்.

கிடைக்கப் பெற்­றுள்ள அறிக்­கையின்  பிர­காரம்  160  கோடி டொலர்   வழங்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. ஆனால்  மறு­புறம்  ஒரு நிறு­வ­னத்­திற்கு மாத்­திரம் 20  இலட்சம் டொலர்  வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.  மிகுதி   நிதிக்கு   என்ன ஆனது என்­பது குறித்தும்  கவனம் செலுத்­தப்­பட வேண்டும்.

எயார் பஸ்  விமான கொள்­வ­னவின் ஊடாக எமக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது. ஏற்­கெ­னவே நட்­டத்தில் இயங்கும்  ஸ்ரீ லங்கன் விமான சேவை இதனால் மேலும் நட்­டத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளது. இதற்கு தொடர்­பு­டைய  நிறு­வ­னத்தில் இருந்தே தீர்வை  பெற்றுக் கொள்ள வேண்டும்.

இலஞ்சம் வழங்­கி­ய­தாக குறிப்­பி­டப்­படும் நிறு­வ­னத்தில் இருந்து விமா­னங்கள்   கடனின் ஊடா­கவும், முழு­மை­யா­கவும் கொள்­வ­னவு செய்­வதை தற்­கா­லி­க­மாக  நிறுத்திக் கொண்டு அந்நிறுவணத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். இந்த முறை கேடு தொடர்பில் ஆரம்பக்கட்ட நடடிக்கைகளை  எமது அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55