மண்­ச­ரிவு மற்றும் வெள்ளத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யா­னது இரண்டு மில்­லியன் டொலரை நிவா­ரண உத­வி­யாக வழங்­கி­யுள்­ளது.

இதற்­கான ஒப்­பந்­த­மா­னது நேற்­றைய தினம் திறைசேரி­யின் ­செ­ய­லா­ளர் ­மற்­றும் ­ஆ­சிய அபி­வி­ருத்தி வங்­கியின் இலங்­கைக்­கான வதி­விட பிர­தி­நி­தி­களுக்கி­டை­யில் ­கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

இது குறித்து ஆசிய அபி­வி­ருத்தி வங்­கிக்­கான இலங்­கையின் வதி­விட பிர­தி­நிதி கருத்து தெரிவிக்­கையில்.

இலங்­கை­யில்­ க­டந்­த ­கா­லங்­களில் நில­விய சீரற்ற கால­நி­லை­யி­னால்­ ஏற்­பட்ட வெள்ளம் மற்றும் மண்­ச­ரி­வினால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர்­க­ளுக்கு அவ­சர வாழ்­வா­தார வச­தி­களை ஏற்­ப­டுத்த வேண்­டிய கட்­டாய நிலை­மை­யினை நாடு எதிர்­நோக்­கி­யுள்ளது.

அந்­த­வ­கை­யில பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்­வா­தாரத்தை மீளக்­கட்­டி­யெ­ழுப்பும் செயற்­பா­டு­க­ளுக்கு உதவி வழங்கும் முக­மா­கவே ஆசிய அபி­வி­ருத்தி வங்கியின் ஆசிய பசுபிக் நாடுகளுக்கிடையிலான அனர்த்த முகாமைத்துவ நிதியத்தினால் இரண்டு மில்லியன் டொலர் உதவி தொகை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.