அவுஸ்திரேலிய காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் போட்டியில் ரிக்கி பொண்டிங் அணி, கில்கிறிஸ்ட் அணியை ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பலர் பாதிக்கப்பட்டனர். பல ஏக்கர் பரப்பிலான மரங்கள் தீயில் எரிந்த நிலையில், பல காட்டு விலங்குகளும் உயிரிழந்தன. 

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதித் திரட்டுவதற்கான கிரிக்கெட் போட்டி, அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று நடைபெற்றது.

இதில் ரிக்கி பொண்டிங் தலைமையில் ஓர் அணியும், ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் மற்றொரு அணியும் தலா 10 ஓவர்கள் வரை விளையாடின. 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கில்கிறிஸ்ட் லெவன் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ரிக்கி பொண்டிங் லெவன் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

ஜஸ்டின் லாங்கர், மேத்யூ ஹெஸ்டன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

லாங்கர் 6 ஓட்டங்களிலும், ஹெய்டன் 16 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ரிக்கி பொண்டிங் 14 பந்தில் 26 ஓட்டங்களை சேர்த்தார். லாரா 11 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ஓட்டங்களை எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். 

இறுதியில் ஹோட்ஜ் 4 பந்தில் 11 ஓட்டங்கள் அடிக்க 10 ஓவரில் ரிக்கி பொண்டிங் லெவன் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்களை சேர்த்தது.

பின்னர் கில்கிறிஸ்ட் லெவன் அணி 105 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. 

கில்கிறிஸ்ட் 11 பந்தில் 17 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஷேன் வோட்சன் 9 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ஓட்டங்கள் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.

அடுத்து வந்த ஹோட்ஜ் டக்கவுட்டனும், யுவராஜ் சிங் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க விலானி 6 ஓட்டங்களுடனும் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.

ஆண்ட்ரூ சிம்மன்ஸ் அதிரடியாக விளையாடி 13 பந்தில் 29 ஓட்டங்கள் சேர்த்தார். கில்கிறிஸ்ட் அணிக்கு ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 

ஆனால் 15 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் ரிக்கி பொண்டிங் லெவன் அணி ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கில்கிறிஸ்ட் லெவன் அணி 10 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்கள் எடுத்தது.