அமெரிக்கா, மிசிசிப்பி மாநிலத்தின் கிளின்டன் நகர்பகுதியில் வீடு ஒன்று தீக்கிரையானதில் தாய் உட்பட அவரது ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சனிக்கிழமை அதிகாலை அந்நாட்டு நேரப்படி 12.30 அளவில் இடம்பெற்ற குறித்த தீவிபத்தில் 33 வயதான தாய் பிரிட்டானி பிரெஸ்லியும், அவரது குழந்தைகளான, லாண்டன் - வயது 15, லேன் - வயது 13, லாசன் - வயது 12, கிரேசன் - வயது 06, மால்காம் - வயது 04, ஃபெலிசிட்டி - வயது 01  ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

 

தாயையும் குழந்தைகளையும்  மீட்க குழந்தைகளின் தந்தை தீவிரமாக போராடியபோதும் அது சாத்தியப்பட வில்லை, அத்துடன் அவர் பலத்த தீ காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து வெளியேற மறுத்த குறித்த தந்தை மீட்கப்பட்டு வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது குணமடைந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சம்பவத்தில் உயிரிழந்த தாய், ஆசிரியையாக பணியாற்றிவந்துள்ளதாகவும் விபத்துக்குள்ளான வீடு 1951 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள்  தெரிவிக்கின்றன. 

தீ விபத்துக்கான காரணம் குறித்து உறுதியாக தெரிவிக்கப்படவில்லை, விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.