முல்லைத்தீவு விசுவமடு  ஏ-35 வீதியில் இன்று (09-02-2020) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (09-02-2020) காலை முல்லைத்தீவில் இருந்து ஏ-35 வழியாக அதி வேகமாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விசுவமடு சந்திக்கு அண்மித்த பகுதியில் தனியார் கல்வி நிலையத்திற்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மாணவி மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மாணவியே படுகாயமடைந்த நிலையில் தருமபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பில் மேலதிக  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.