மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் வெடிபொருட்கள் சிலவற்றை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளதாக  வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை மாலை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது காயான்கேணியில் உள்ள கைவிடப்பட்ட காணியிலிருந்து  புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட 5 மிதி வெடிகள்  மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதேவேளை வியாழக்கிழமையன்று  (6.2.2020) மாலை  ஓட்டமாவடி பிரதேசத்தில் வெடிபொருட்கள் சிலவற்றினை கைப்பற்றியதுடன் 2 சந்தேக நபர்களையும் கைது செய்திருந்தனர்.

 ஜெலக்ரிக்ஸ் குச்சிகள்-47,சேப்ரி கோட் வயர் 36அடி,நொன் இலக்ரிக்ஸ் பொருட்கள் 69 என்பன கைப்பற்றப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வாழைச்சேனை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.