நைஜீரியா மற்றும் சாட் நாட்டிற்கு மத்தியில் உள்ள சாட் ஏரிப்பகுதியில் அமைந்துள்ள 'கவுல்பவ்வா' தீவில் நேற்று இடம்பெற்ற 3 தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  80 பேர் வரை தாக்குதல்களில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்த பலர் இங்கு தஞ்சமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.