(செ.தேன்மொழி)

தலங்கம பகுதியில் அனுமதிப் பத்திரமன்றி வைத்திருந்த துப்பாக்கி மற்றும் சட்டவிரோத சிகரட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கம - ரொபட் குணவர்தன மாவத்தையில் நேற்று பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 2000 சட்டவிரோத சிகரட்டுகளும் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய 800 சட்டவிரோத சிகரட்டுகளையும், வெளிநாட்டு துப்பாக்கியொன்றையும் கைப்பற்றியுள்ளதுடன் , மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் தலங்கம மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31,53 வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.