(செ.தேன்மொழி)

பஸ் ஒன்றில் முன் மிதிப்பலகையில் சென்ற இளைஞன் வழுக்கி விழுந்து சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருணாகலை - புத்தளம் வீதியில் பாதெனிய மாரகஸ்கொல்ல பகுதியில் இன்று சனிக்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது பஸ்ஸின் முன் மிதிப்பலகையில் பயணித்துள்ள இளைஞன் விழுந்துள்ளதுடன், பஸ்ஸின் பின்புறத்தில் உள்ள சில்லிலும் மோதுண்டுள்ளார். இதன்போது படுகாமடைந்த இளைஞன் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளார்.

ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன் ,மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.