சதொச நிறுவனத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள சுமார் 4 இலட்சம் கிலோவிற்கும் அதிகமான அரிசியினை விலங்கு உணவிற்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள அரிச தொகையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 3 இலட்சத்து 88 ஆயிரத்து 484 கிலோ அரிசியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன் அமைச்சின்  செயலாளர் ஜி.கே.எஸ். எல். திரு இராஜதாச  கூறுகையில் , 

நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் வெளிநாட்டு அரிசியை விட உள்ளுர் அரிசியை விரும்புகிறார்கள்.

இதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் அரிசி விற்பனை குறைகிறது. எனவே தான் களஞ்சியப்படுத்தப்பட்ட அரிசி விலங்குகளுக்கான உணவை தயாரிப்பதற்கு பயன்படுத்த வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

நாட்டில் அரிசி பற்றாக்குறை இருப்பதாக அறிவிக்கப்படும் போது , அரிசியை இறக்குமதி செய்கின்றனர். நாட்டிற்கு அரிசி பற்றாக்குறை ஏற்படும் போது அதற்கான தீர்வினை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனினும் இறக்குமதி செய்யப்படும், அரிசி  இலங்கைக்கு வரும்போது, உள்நாட்டு அரிசி இங்கு அறுவடை செய்யப்படுகின்றன இதனாலே இவ்வாறான அரிசி களஞ்சியசாலைகளில் சேமிக்கப்பட்டு பாவனைக்கு உதவாமல் போகின்றது.

இதன் காரணமாகவே சதொச நிறுவனத்தின் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் 410,484 கிலோ அரிசி விலங்கு தீவனத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.