கொரோனா வைரஸ் : புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள எறும்பு உண்ணிகள் ?

08 Feb, 2020 | 04:29 PM
image

சீனாவில் கொரோனா வைரஸ் விலங்குகளில் இருந்து தோன்றியதாக உறுதிசெய்யப்பட்ட போதும் அது சரியாக எந்த விலங்கில் இருந்து தோன்றி இருக்கலாம் என்பது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இதுவரை 724 பேரை பலியெடுத்துள்ள கொரோனா வைரஸ், பல்லாயிரக்கணக்கில் சீனர்களையும் அதேவேளை நுற்றுக்கான ஏனைய நட்டவர்களையும் பாதித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகத்தை அச்சுறுத்தி வருகின்ற நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் அவரச நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன் இந்த கொரோனாவின் தோற்றம் குறித்து ஆராயும் பணியில்  சீனா உட்பட உலகின் பல பிரபல ஆராய்ச்சியாளர்கள், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதன் முதல் கட்டமாக வெளவால்களின் மரபணுக்கள் வைரஸை பெருமளவு ஒத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் வெளவால்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பு மிக குறைவகவே உள்ளதால் இது பரவுவதற்கு வேறு காரணம் இருக்கலாம் என ஆய்வுகள் தொடர்ந்தன. 

தற்போது ஒரு மரபணு பகுப்பாய்வு வைரஸின் திரிபு வெளவால்களில் காணப்படுவதை விட எறும்பு உண்ணிகளிடம்  96 வீதம் ஒத்து காணப்படுவதாக கண்டிறியப்பட்டுள்ளது. 

அதாவாது, வெளவால்களிலிருந்து இவ் வைரஸ் உருவாகியிருந்தாலும் அது மனிதனுக்கு நேரடியாக தொற்றவில்லை. ஒரு இடைத்தரகரான மற்றொரு விலங்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சந்தேகித்தனர்.

தற்போது அந்த விலங்கு எறும்பு உண்ணியாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளவால்களின் எச்சங்களை எறும்பு உண்ணிகள் உண்டிருக்கலாம் என்றும் இதன் காரணமாக அவை வைரஸ் தொற்றுக்குள்ளாகி, அதனை மனிதர்கள் உண்பதன் காரணமாக பரவியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் சீனவின் வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காட்டு விலங்குகளிடமிருந்து 1,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதித்தபின், எறும்பு உண்ணிகளில் உள்ள வைரஸ்களின் மரபணு வரிசைமுறைகள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு 99 வீதத்தை ஒத்ததாக இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இதனை நிபுணர்கள் எச்சரிக்கையுடன் மறுத்துள்ளனர். "இது அறிவியல் சான்றுகள் அல்ல" என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவத் துறையின் தலைவர் ஜேம்ஸ் வூட் கூறியுள்ளார். 

"விலங்குகள் பற்றிய ஆய்வுகள் மிக முக்கியமானவை, ஆனால் முடிவுகள் சர்வதேச ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்பே வெளியிடப்பட வேண்டும். 99 வீதத்திற்கும் அதிகமான மரபணு வரிசை ஒற்றுமையுடன் வைரஸ் ஆர்.என்.ஏ வைக் கண்டறிவது ஆய்வை உறுதிப்படுத்த போதுமானதாக இல்லை," என்று அவர் கூறியுள்ளர். 

அத்துடன் ஒரு சரியான முடிவை கண்டறிவதற்கு குறித்த விலங்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்ட அனைத்து விலங்குகளையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

எறும்பு உண்ணியின் சுவை மற்றும் மருத்துவ குணம் காரணமாக ஆசியாவில் குறிப்பாக சீனாவில் மிக அதிகமாக விரும்பி உண்ணும் விலங்குணவாக இது உள்ளது.  இதன் சுருண்டு கொள்ளும் இயல்பு இது எளிதாக பிடிபடுவதற்கு காரணமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 724 பேர் உயிரிழந்துள்ளதுடன் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புட்டினின் யுத்தத்தை வலுப்படுத்தி அதனை நீடிக்கச்...

2024-06-18 14:36:31
news-image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு...

2024-06-18 14:20:37
news-image

வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி

2024-06-18 14:20:54
news-image

67 பேருடன் பறந்துகொண்டிருந்த அவுஸ்திரேலிய விமானத்தில்...

2024-06-18 13:15:30
news-image

பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள்...

2024-06-18 12:18:45
news-image

24 வருடங்களிற்கு பின்னர் வடகொரியாவிற்கு வரலாற்று...

2024-06-18 11:16:13
news-image

மத்திய தரைக்கடலில் இரு படகுகள் விபத்து...

2024-06-18 16:06:08
news-image

சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில்...

2024-06-17 16:46:58
news-image

ஜப்பானில் பரவி வரும் ஆபத்தான பற்றீரியா...

2024-06-17 16:20:17
news-image

மேற்கு வங்கம் | கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்...

2024-06-17 14:09:25
news-image

மின்னணு இயந்திரங்கள் எல்லாம் கருப்பு பெட்டிகள்...

2024-06-17 14:04:34
news-image

மனச்சோர்வை - சலிப்பை ஏற்படுத்தும்- இடைவிடாத...

2024-06-17 12:24:32