சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவரை இருதினங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் கைது செய்துள்ளதாக சுங்க ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குருணாகலை பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரும் மொரட்டுவை  கட்டுபெத்தையை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இன்று (08.02.2020) காலை டுபாயின் ஓமான் ஏர் டபிள்யு.ஒய் -341 விமானத்தில் இலங்கை வந்த மொரட்டுவை  கட்டுபெத்தையைச் சேர்ந்த நபர் 24,000 சிகரெட்டுகள் அடங்கிய 120 பெட்டிகளை கடத்த முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி ரூபா. 15560,000 பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன்  2/14 அன்று நீர்கொழும்பு  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை நேற்றையதினம் (07.02.2020) காலை 10.00 மணியளவில் KU-363 என்ற விமானத்தில்  குவைத்திலிருந்து இலங்கை வந்த குருணாகலை சேர்ந்த மற்றாருநபர் 35,240 சிகரெட்டுகள் அடங்கிய 176 சிகரெட் பெட்டிகளை கடத்த முட்பட்ட போது சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்ததுடன் சிகரெட்டுகளை  பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள்  ரூபா 17,62,000 பெறுமதியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட்டுகளை பறிமுதல் செய்த  சுங்க அதிகாரிகள்  குறித்த நபருக்கு ரூபா. 25,000 அபராதம் விதித்ததுள்ளனர்.

இரு நபர்களிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி ரூபா.  Rs  17,322,000.00 என்பது குறிப்பிடத்தக்கது.