(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாண சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இறால் பண்ணைகள் அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதால் அதற்கு எதிராக கடற்றொழில் மற்றும் விவசாய அமைப்புக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

யாழ்ப்பாண குடாக்கடற்பரப்பில் யாழ்ப்பாணம் மற்றும்  வெளியிடங்களைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு இறால் பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றது.

குறித்த விடையங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் அதையும் தாண்டி பண்னைகள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவ ருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன பல இடங்களில் இறால் பண்ணை அமைப்பதனால் சூழல்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புத்தி ஜீவிகள் அறிவித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலும் இத்தகைய முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த முயற்சியானது கடற்றொழிலை நம்பி வாழ்பவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகவே இருக்கின்றுது குறித்த விடையம் தொடர்பில் பலரிடமும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அடுத்தவாரமளவில் வடமாகாண கடற்றொழில் இணையம் ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாய அமைப்புக்கள் தீவக பொது அமைப்புக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் மூலம் இதனைத் தடுப்பதற்கு முயற்சிகளை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.