இலங்கை தேசிய கூட்டுறவுச் சபையின் உபதலைவராக  அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளரா கடமையாற்றி வரும் அமரசிங்கம் கேதீஸ்வரன் கடந்த 05-02-2020 அன்று கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தேசிய கூட்டுறவு சபையின் நிர்வாக தெரிவின் போது உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

153 பொதுச்சபை பேராளர்கள்  கலந்துகொண்டு வாக்களிக்கும் கூட்டத்தில் இலங்கை தேசிய கூட்டுறவுச் சபையின்  தலைவராக குளியாபிட்டி மாவட்ட கூட்டுறவுச் சபையின் தலைவரா கடமையாற்றும்  சரத் வீரசிறி தெரிவு செய்யபட்டதோடு, உப தலைவராக கேதீஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமரசிங்கம் கேதீஸ்வரன் கிளிநொச்சி கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்,கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் போன்றவற்றில் தலைவராக  இருந்து  மாகாண மட்ட பிரதிநிதியாக தேசிய கூட்டுறவுச் சபைக்கு தெரிவு செய்யபட்டவர்.

ஆசிய பசுபிக் பிராந்திய கூட்டுறவுச் சபையில் அங்கத்துவம் வகிக்கும் இவ்வமைப்பு இலங்கையின் கூட்டுறவு அமைப்புகளின்  தலைமை அமைப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.