கண்டி திகன வீதியில் மெனிக்கின்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் பரிதாபமாக உரிழந்துள்ளனர்.

குறித்த நான்கு இளைஞர்களும் பணித்த வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் 17 மற்றும் 19 வயதிற்கிடைப்பட்ட திருகோணமலை, மஹியங்கனை, உகன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.