ரஞ்சனிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மூலம் குற்றங்கள் ஏதும் புரியப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசேட விசாரணை

Published By: Vishnu

07 Feb, 2020 | 07:40 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட அவரது,  காலவதியான அனுமதிப்பத்திரத்துடன் கூடிய கைத்துப்பாக்கியால் ஏதேனும் குற்றங்கள் புரியப்பட்டுள்ளதா என்பது குறித்து விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு இன்று நுகேகொட நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. 

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வாவினால் இது குறித்து மேலதிக நீதிவான் எச்.யூ.கே.பெல்பொலவுக்கு இன்று விஷேட அறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டது.

சோதனை உத்தரவுக்கு அமைய ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி, இறுவெட்டுகள் உள்ளிட்டவை அரச இரசாயன பகுப்பயவுக்கு அனுப்பட்டுள்ள நிலையில், இன்று அது குறித்த வழக்கு நுகேகொடை மேலதிக நீதிவான் எச்.யூ.கே.பெல்பொல முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிபதிகளின் கடமைகளில் குறுக்கீடு செய்த விவகாரம் தொடர்பிலான பிரத்தியேக வழக்கின் உத்தரவுக்கு அமைய  குரல் மாதிரிகளை பரிசீலிப்பதற்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு இன்று முற்பகல் அழைத்துச்செல்லப்பட்டார்.

இதன்போது அவரிடம் குரல் மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து அவர் இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகளுக்காக நுகேகொடை நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47