சட்டவிரோத  மீன்பிடியில் ஈடுபட்ட 23 இலங்கை மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பூர் கடற்பகுதியில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில்  குறித்த 23   மீனவர்களும்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 3 பைபர் கண்ணாடிப் படகுகள், 3 தங்கூசி வலைகள்  மற்றும் சில மீன்பிடி உபகரணங்கள்  என்பவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை குறித்த 23 மீனவர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக முத்தூர் மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.