கார்கில்ஸ் ஃபூட் சிட்டியில் இந்த ஊக்குவிப்பு இடம்பெற்ற 2018 ஆகஸ்ட் முதல் 2019 டிசம்பர் வரையான காலப்பகுதியில் கார்கில்ஸ் வங்கியால் முன்னெடுக்கப்பட்ட 15% பண மீளளிப்பு சலுகையை சிறப்பாகப் பயன்படுத்தி,  அதிகூடிய சேமிப்பை அனுபவித்த ஐந்து முன்னணி வாடிக்கையாளர்களை கார்கில்ஸ் வங்கி தெரிவு செய்துள்ளது. 

கார்கில்ஸ் ஃபூட் சிட்டியில் இடம்பெற்ற 15% பண மீளளிப்பு சலுகையானது வாடிக்கையாளர்கள் தமது கார்கில்ஸ் வங்கி கடனட்டையை உபயோகித்து கார்கில்ஸ் ஃபூட் சிட்டியில் பொருட் கொள்வனவை மேற்கொள்ளும் போது மாதந்தோறும் ரூபா 7,500 வரையான தொகையை சேமிப்பதற்கு இடமளித்துள்ளது.  

கார்கில்ஸ் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. இராஜேந்திரா தியாகராஜா அவர்களின் பங்குபற்றலுடன் ஐந்து முன்னணி வாடிக்கையாளர்களுக்கும் இனங்காணல் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் முன்னிலையில் அவர் உரையாற்றுகையில், “கார்கில்ஸ் ஃபூட் சிட்டியுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட கார்கில்ஸ் வங்கி கடனட்டை 15% பண மீளளிப்பு சலுகையின் மூலமாக ஐந்து முன்னணி வாடிக்கை யாளர் களுக்கு இனங்காணல் அங்கீகாரத்தை வழங்குவது எமக்கு கௌரவத்தையும், பெருமகிழ்ச்சியையும் அளிக்கின்றது.

 கார்கில்ஸ் குழும கட்டமைப்பினுள் எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சலுகைகளை வழங்கும் வழிமுறைகளை நாம் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றோம். வங்கிக்கு நீங்கள் தொடர்ந்தும் வழங்கி வருகின்ற ஆதரவு எமக்கு மிக்க கௌரவமளிப்பதுடன், இன்னும் சிறப்பான அளவில் பயன்கள் மற்றும் சிறப்பம்சங்களுடன் இதை விட சிறப்பாக உங்களுக்கு சேவையளிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார். 

இனங்காணல் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஐந்து முன்னணி வாடிக்கையாளர்களின் விபரங்கள் வருமாறு: மாத்தறையைச் சேர்ந்த திரு. அத்துல புஷ்பகுமார, கொழும்பு 02 இனைச் சேர்ந்த திரு. நயோமல் பஸ்நாயக்க, கொழும்பு 15 இனைச் சேர்ந்த திரு. சுரேன் ஜேக்கப், பத்தரமுல்லையைச் சேர்ந்த திரு. சேனக சப்பரமாது மற்றும் வஞ்சாவலவைச் சேர்ந்த திரு. தீகாயு விதானகே. 

மிகுந்த மகிழ்ச்சியும், திருப்தியும் அடையப்பெற்ற வாடிக்கையாளர்கள் இந்த கருப்பொருள் தொடர்பில் தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். திரு. சேனக சப்பரமாது அவர்கள் கருத்து வெளியிடுகையில், “நான் தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக வாடிக்கையாளராக உள்ளேன். இது ஒரு சிறந்த கருப்பொருளாக காணப்படுவதுடன், கார்கில்ஸ் ஃபூட் சிட்டியில் பொருட் கொள்வனவை மேற்கொள்வதற்கான ஒரு கூடுதல் வெகுமதியாகும். மேலும் அட்டையிலுள்ள பாதுகாப்பு அம்சங்கள் மிகச் சிறந்தவையாக காணப்படுவதுடன், எமக்கு அவை சௌகரியமளிக்கின்றன,” என்று குறிப்பிட்டார். 

திரு. சுரேன் ஜேக்கப் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “பண மீளளிப்பு சலுகையானது நான் உட்பட பெருமள வானோரை கார்கில்ஸ் வங்கி கடனட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு ஈர்த்துள்ளது. அன்று தொட்டு எனக்கு தேவையான அனைத்தையும் கொள்வனவு செய்வதற்கு நான் கார்கில்ஸ் ஃபூட் சிட்டிக்கே செல்வதுடன், இந்த அட்டை எனக்கு பெரும் பயனை அளித்துள்ளது,” என்று குறிப்பிட்டார். 

திரு. நயோமல் பஸ்நாயக்க அவர்கள் கருத்து வெளியிடுகையில், “15 சதவீதம் என்ற சிறந்த தள்ளுபடியுடன் கணிசமான தொகையை சேமிக்க முடிந்துள்ளமை அறியும் போது சிறந்த உணர்வு ஏற்படுகின்றது. நானும் எனது மனைவியும் கார்கில்ஸ் ஃபூட் சிட்டிக்கு அடிக்கடி செல்கின்ற வாடிக்கையாளர்களாக இருப்பதுடன், கார்கில்ஸ் ஃபூட் சிட்டியில் பொருட் கொள்வனவை மேற்கொள்ளும் போது கார்கில்ஸ் வங்கி அட்டையை மாத்திரமே உபயோகிக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.  

திரு. தீகாயு விதானகே அவர்கள் கருத்து வெளியிடுகையில், “ஆரம்பம் முதற்கொண்டே நான் கார்கில்ஸ் வங்கி கடனட்டையை உபயோகித்துள்ளதுடன், இந்த சிறப்பு சலுகை காரணமான பாரிய தொகையை சேமித்துள்ளேன். கார்கில்ஸ் வங்கி கடனட்டை எனக்கு மிகுந்த திருப்தி அளித்துள்ளதுடன், எனது வாழ்வை இலகுபடுத்திய இந்த வியத்தகு அட்டையைப் பெற்றுக்கொள்ளுமாறு எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் கூறியுள்ளேன்,” என்று குறிப்பிட்டார். 

திரு. அத்துல புஷ்பகுமார அவர்கள் கருத்து வெளியிடுகையில், “எனக்கு நெருக்கமான பலரும் பரிந்துரை செய்தமையால் இந்த அட்டையைப் பெற்றுக்கொண்ட சமயத்திலிருந்தே நான் அதனை உபயோகித்து வந்துள்ளேன். நான் கார்கில்ஸ் ஃபூட் சிட்டியில் கார்கில்ஸ் வங்கி கடனட்டையை அடிக்கடி பயன்படுத்தி வருவதுடன், பெருந்தொகை பணத்தைச் சேமிப்பதற்கு எனக்கு அது உதவியுள்ளது. சந்தையில் உள்ள மிகச் சிறந்த கடனட்டை இதுவே,” என்று குறிப்பிட்டார். 

கார்கில்ஸ் வங்கி அட்டைகள் சேவைகள் துறையின் உதவிப் பொது முகாமையாளரான மஹேஷா அமரசூரிய அவர்கள் கருத்து வெளியிடுகையில், “கார்கில்ஸ் வங்கி கடனட்டை தொடர்பில் வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரித்து, அவர்களின் ஈடுபாட்டை உள்வாங்குவதுடன், அவர்களை கார்கில்ஸ் குழுமத்தின் கட்டமைப்புடன் இணைப்பதற்காகவே கார்கில்ஸ் ஃபூட் சிட்டியுடன் இணைந்த 15% பண மீளளிப்புப் பிரச்சாரத்தை நாம் திட்டமிட்டோம்.

படத்தில் திரு. சுரேன் ஜேக்கப், திரு. அத்துல புஷ்பகுமார, திரு. தீகாயு விதானகே, திரு. இராஜேந்திரா தியாகராஜா (கார்கில்ஸ் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி), மஹேஷா அமரசூரிய (உதவிப் பொது முகாமையாளர் - கார்கில்ஸ் வங்கி அட்டைகள் சேவைகள்), திரு. நயோமல் பஸ்நாயக்க மற்றும் திரு. சேனக சப்பரமாது. 

 கார்கில்ஸ் ஃபூட் சிட்டியுடன் இணைந்து நாம் முன்னெடுக்கவுள்ள அடுத்த வியப்பூட்டும் பிரச்சாரமானது “குசநளாநௌள யவ வைள டீநளவ” என்ற கருப்பொருளில் ஆரம்பிக்கப் படவுள்ளதுடன், எமது பயணத்தில் அங்கம் வகிக்குமாறு பெறுமதிவாய்ந்த எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார். 

இதற்கிடையில், கார்கில்ஸ் ஃபூட் சிட்டி மிகவும் துரிதமான விஸ்தரிப்பு முன்னெடுப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. கடனட்டைப் பட்டியல்களுக்கான கொடுப்பனவுகள் அடங்கலாக, பண வைப்பு மற்றும் பண மீளப்பெறல் வசதிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கூடுதலான சௌகரியத்திற்கு புதிய கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை மையங்கள் அனைத்தும் இடமளிக்கும். 

‘கார்கில்ஸ்’ என்ற வர்த்தகநாமம், விழுமியங்கள் மற்றும் தொழில்தர்மம் ஆகிய அத்திவாரத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டு, கடந்த 175 ஆண்டுகளாக இலங்கை மக்களுக்கு விசுவாசத்துடன் சேவையாற்றி வந்துள்ளது. ‘மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வங்கிச்சேவை’ என்ற தனது பாரம்பரியத்திற்கு உண்மையாக அர்த்தம் கற்பித்து வரும் கார்கில்ஸ் வங்கி, இலங்கையில் அனைத்து மக்களும் வங்கிச்சேவைகளை அனுபவிக்கும் வகையில் அவர்கள் அதனை இலகுவாக அடையப்பெறுகின்ற வழிமுறைகளை முன்னெடுத்து வருகின்றது. 

விசேட சலுகைகளுடன் கூடிய கார்கில்ஸ் வங்கி டெபிட் அட்டையானது தற்போது விவேகமான வாடிக்கையாளர்கள் அனைவரும் ‘கட்டாயமாக கொண்டிருக்க வேண்டிய’ ஒன்றாக மாறியுள்ளது. 

கார்கில்ஸ் வங்கியின் தலைமை அலுவலகம் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ளதுடன், மெயிட்லான்ட் கிரெசென்ட், மஹரகம, பழைய சோனகத்தெரு, வத்தளை, கண்டி, பேராதனை, நுவரெலியா, இரத்தினபுரி, தனமல்வில, மாத்தறை, காலி, குருணாகல், சிலாபம், கதுருவெல, வவுனியா, சுன்னாகம், யாழ்ப்பாணம் ராஜகிரிய மற்றும் கோட்டை ஆகிய இடங்களில் கிளைகளையும் கொண்டுள்ளது.