சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங் இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைப்பேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த உரையாடலில் அவர் தெரிவித்திருப்பதாவது,

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தற்போது வரை 31,481  பேர் பாதிப்படைந்துள்ளதோடு , 640 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

தன்னால் முடிந்த அனைத்தையும் சீன அரசு செய்து வருகிறது. அத்தோடு வைரஸை  கட்டுப்படுத்த முழு வீச்சுடன் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.

அத்தோடு சீனாவின் பொருளாதாரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத  வகையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமென அவர் ட்ரம்புடனான தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்தார்.

அதேவேளை கொரோனா வைரஸிற்கும் சீனாவுக்கு இடையிலான போரில் சீனா படிப்படியாக அதன் தாக்கங்கங்களை குறைத்து வருகின்றது என சீன ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.