சந்தானம் நடிக்கும் ‘பிஸ்கோத்’ படம்  விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகின்றது. 

கடந்த ஆண்டில் இரண்டு வெற்றிப் படங்களும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘டகால்டி’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்திருக்கும் சந்தானம், விரைவில் சர்வர் சுந்தரம் என்ற படத்திலும் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தவிருக்கிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக தயாராகிவரும் திரைப்படத்திற்கு ‘பிஸ்கோத்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

காதலும் நகைச்சுவையும் கலந்த இந்த படத்தில் சந்தானத்துடன் மூத்த நடிகை சௌகார் ஜானகி ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதனை இயக்குநர் ஆர் கண்ணன் தயாரித்து, இயக்கியிருக்கிறார். அண்மையில் படப்பிடிப்பு முடிவடைந்ததால் இப்படத்திற்கு தற்போது ‘பிஸ்கோத்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமானஅறிவிப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்காக நடிகர் சந்தானம் திரைப்பட சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவாவிடம் சிலம்பம் கற்றுக் கொண்டு சிலம்பு சண்டை செய்திருக்கிறார்  என்பதும், மூத்த நடிகை சௌகார் ஜானகி நடித்திருக்கும் நானூறாவது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.