கொழுப்பு கல்லீரல் பாதிப்பை கண்டறியும் நவீன பரிசோதனை

Published By: Daya

07 Feb, 2020 | 03:19 PM
image

உணவு முறை மாற்றத்தால், 40 வயதிற்குள்ளாகவே கொழுப்பு கல்லீரல் அதாவது ஃபேட்டி லிவர் என்ற பாதிப்புக்குள்ளாகிறோம். இந்த பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள தற்போது, ஃபைப்ரோஸ்கேன் ( Fibroscan) என்ற நவீன பரிசோதனை கருவி அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது. இத்தகைய கருவின் மூலம் நம்முடைய உடலில் உள்ள கல்லீரலில், கொழுப்பு அதிக அளவில் சேர்ந்து கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள இயலும்.

எம்முடைய உடலில் தொடர்ச்சியாக இயங்கும் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. இந்த கல்லீரலை நாம் அருந்தும் மதுவும், நாம் அளவுக்கு அதிகமாகச் உட்கொள்ளும் கொழுப்பும் பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது. இந்நிலையில் கல்லீரல், கொழுப்பை சேகரித்து வைக்கும் பணியை முதன்மையான பணியாக செய்து வருகிறது அவசர நிலையில் உடலுக்குத் தேவையான சக்தியை தருவதும் இந்த கல்லீரல் சேமித்து வைத்திருக்கும் கொழுப்புகள் மூலமாகத்தான். 

இந்நிலையில் ஒரு எல்லைக்கு மேல் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து விட்டால் அதுவே கொழுப்பு கல்லீரல் என்ற பாதிப்பாக மாறுகிறது.

கொழுப்பு கல்லீரல் பாதிப்பு முதலிரண்டு நிலையில் இருக்கும் வரை, அதனை மருந்துகளின் மூலம் மற்றும் சிகிச்சைகளின் மூலம் கட்டுப்படுத்தலாம். ஆனால் மூன்றாவது மற்றும் முற்றிய நிலைக்கு அதிகரித்து விட்டால் அதற்கு கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை தான் சிறந்த தீர்வாக அமையும்.

இந்நிலையில் இத்தகைய பாதிப்பைக் கண்டறிய பல பரிசோதனைகள் இருந்தாலும், தற்போது அறிமுகமாகியிருக்கும் ஃபைப்ரோஸ்கேன்  என்ற கருவியின் மூலமாக பரிசோதனை கல்லீரல் செயற்பாட்டை துல்லியமாக அறியமுடிகிறது.

கொழுப்பு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மதுவை முற்றாக தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், இனிப்பு, நொறுக்கு தீனி, பாலாடைக்கட்டி, வெண்ணெய் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

அவரைக்காய், சிவப்பு, தோடம்பழலம் மற்றும் அடர் பச்சை வண்ணங்களில் உள்ள காய்கறிகள், முளைவிட்ட தானியங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமில சத்து உள்ள மீன் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம் .தினமும் உடற்பயிற்சி அவசியம். மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். நாளாந்தம் குறைந்தபட்சம் 6 மணி நேரம் இரவில் உறங்க வேண்டும். இதனை தொடர்ச்சியாகவும், உறுதியாகவும் பின்பற்றினால் கொழுப்பு கல்லீரல் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்