
சிறுவர்கள் தொடர்பில் செய்திகளை வெளியிடும் போது ஊடகங்கள் தமது இருப்பை சிந்திக்காது சிறுவர்களின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு செய்திகளை வெளியிட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தனது பிள்ளை மீது காட்டும் கரிசனையை ஏனைய பிள்ளைகள் மீதும் காட்ட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொலன்னறுவை றோயல் கல்லூரியில் இன்று இடம்பெற்ற தேசிய சிறுவர் சபையை ஸ்தாபித்தல் மற்றும் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சி திட்டத்தின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.