பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமானார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்றே இந்தியா செல்லும் பிரதமர் மஹிந்த, பெப்ரவரி 11 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும். 

இந்த விஜயத்தின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபடுவார். 

இந்த சந்திப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவதுடன் அரசியல், வர்த்தகம், வளர்ச்சி, பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் சுற்றுலா போன்ற முக்கியமான துறைகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.