பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட  பிரேரணையை அமுல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திடமிருந்து  பரந்துபட்ட உபாயமார்க்கம் தேவைப்படுகின்றது என்று  ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் தெரிவித்தார். 

இந்த செயற்பாட்டில் அனைத்தையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள  ஈடுபாடு அனைத்து இலங்கையர்களிடம் இருந்தும் வெளிவரவேண்டும்.  இந்தக் கூட்டத் தொடரின் இறுதியில் நான் இலங்கை குறித்த வாய்மூல அறிக்கையை வெளியிடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  32 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது.   அதில் ஆரம்ப  உரையை நிகழ்த்துகையிலேயே   ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.