மட்டக்களப்பு வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேசத்தில் வெடி பொருட்களுடன் வேவ்வேறு பிரதேசத்தில் இருவரை நேற்று விசேட அதிரடிப்படையினர் மற்றும்  பொலிஸ் புலனாய்வுயினரால் கைது செய்துள்ளதுடன் வெடிபொருட்களை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி விசேட அதிரப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு ஓட்டமாவடியில் உள்ள பழைய இரும்பு கடை (நாடான் கடை ) யில்  விசேட அதிரப்படையின் சுற்றிவளைப்பின் போது 45 ஜெலினைற் குச்சிகள், 89 டிக்கினேற்றர்கள், 33 மீற்றர் வயர் போன்ற வெடிபொருட்களை மீட்டுள்ளதுடன் அந்த கடையின் 54 வயதுடைய  உரிமையாளர் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர் 

இதேவேளை பொலிஸ் புலனாய்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாழசை்சேனை ஓட்டமாவடி  ஆலிம் வீதியிலுள்ள வீடு ஒன்றில் 2 ஜெலினைற் 1 மீற்றர் வயறும் மீட்கப்பட்டதுடன் 69 வயதுடையவர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ் சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.