யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் 612 போ் தற்கொலைக்கு முயன்றுள்ளதுடன், அவா்களில் 105 போ் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019 ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையானது கடந்த நான்கு ஆண்டுகளினை விடவும் அதிகரித்தே கானப்படுகின்றது.

இருப்பினும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு சற்றுக் குறைவடைந்துள்ளது. இவற்றின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டில்  578 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அதில் 110 பேர் உயிரிழந்தனர் .

2017ஆம் ஆண்டில் 579 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் 59 பேர் உயிரிக்க ஏனையோர் காப்பற்றப்பட்டனர். இதேபோன்று 2018ஆம் ஆண்டில் 582 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 150பேர் உயிரிழந்திருந்தனர்

2019ஆம் ஆண்டில் 612 பேர் தற்கொலைக்கு முயன்ற சமயம் 105 பேர் உயிரிழந்தபோதும் ஏனையோர் காப்பாற்றப்பட்டனர்.

இதேநேரம் இதில் சிலர் ஒன்றிற்கு மேற்பட்ட தடவை தற்கொலைக்கு முயன்றவர்களும் உண்டு. இருந்தபோதும் இவ்வாறு தவறான முடிவினை எடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும்  அதிகரித்த வண்ணமே இருப்பதும் வைத்தியத்துறைக்கு ஒரு பாரிய சவாலாகவே உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.