வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவர்கள் மூவரை அதிபர் கடுமையாயான தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

அதிபரின் தாக்குதலால் கடுமையான காயங்களுக்கு உள்ளன இரட்டையர் உள்பட 3 சிறுவர்கள் மந்திகை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

9 வயதுடைய இவர்கள் வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத சந்தர்ப்பத்தில் விளையாடிய பொழுது, அதிபர்  குறித்த மாணவர்களைப் பச்சை மட்டையால் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகின்றது.

மாணவர்கள் மூவரும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்த்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்காலத்தில் உடல் ரீதியான தண்டனை வழங்குவது சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.