கொரோனா வைரஸ் தொற்று அச்சம் கார­ண­மாக மண­ம­கனும் மண­ம­களும் இல்­லாது திரு­மண வைபவம் இடம்­பெற்ற விநோத சம்­பவம் சிங்­கப்­பூரில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற இந்தத் திரு­மண நிகழ்வு தொடர்பில் நேற்று வியா­ழக்­கி­ழமை தக­வல்கள் வெளியா­கி­யுள்­ளன.

ஜோசப் யியூ என்ற மண­ம­கனும்  காங் திங் என்ற மண­ம­களும்  தமது திரு­மண தினத்­திற்கு சில நாட்­க­ளுக்கு முன்­பா­கவே சீனா­வுக்­கான சுற்­று­லாவை மேற்­கொண்டு விட்டு தாய்­நாடு திரும்­பி­யி­ருந்­தனர்.

கொரோனா வைரஸ் வேக­மாக பரவி வரும் சீனப் பிராந்­தி­யத்­திற்கு சென்ற அவர்­க­ளுக்கு கொரோனா தொற்று ஏற்­பட்­டி­ருக்­கலாம் என்ற அச்சம்  திரு­மண விருந்­தி­னர்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருந்­ததால் அது தொடர்­பான கவ­லையை அவர்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

இதனால் வேறு வழி தெரி­யாத ஜோசப்பும் காங் திங்கும் அதற்கு மாற்று வழி­யொன்றை கண்­டு­பி­டித்­தனர்.

இதன்­பி­ர­காரம் மண­ம­கனும் மண­ம­களும் திரு­மணம் நடை­பெ­று­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்த மத்­திய சிங்­கப்­பூ­ரி­லுள்ள எம் ஹோட்­ட­லி­லுள்ள  மண்­ட­பத்­திற்கு வருகை தராது தனி­மை­யான இட­மொன்றில் திரு­மணம் செய்து கொண்­டனர். அவர்கள் திரு­மணம் செய்துகொள்ளும்  காட்சி  காணொ­ளிப்­படக் கரு­வியின் மூலம் பட­மாக்­கப்­பட்டு திரு­மண மண்­ட­பத்தில் பாரிய திரை­யொன்றில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்­நி­லையில் திரு­மண மண்­ட­பத்தில் கூடி­யி­ருந்த பெருந்­தொ­கை­யான உற­வி­னர்­களும்  நண்­பர்­களும்  கொரோனா வைரஸ் தொற்று அச்­ச­மின்றி திரையில் நேரடி ஒளிப­ரப்பு முறை­மையின் மூலம் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்ட திரு­ம­ணத்தை  மன­நி­றை­வுடன் கண்­டு­க­ளித்துவிட்டு அங்கு இடம்­பெற்ற விருந்­து­ப­சா­ரத்தில் பங்­கேற்­றனர்.

தமது திரு­மணம் குறித்து ஜோசப் தெரி­விக்­கையில்,  தாம் எமது திரு­மண வைப­வத்தை பிற்­போட விரும்­பி­ய­தா­கவும்  ஆனால் ஹோட்டல் நிர்­வாகம்  திரு­ம­ணத்­திற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும்  மேற்­கொள்ளப்­பட்டுவிட்ட நிலையில் திரு­ம­ணத்தை பிற்­போ­டு­வதை விரும்­ப­வில்லை எனவும் அதனால் வேறு வழி தெரி­யாத தாம் இவ்­வாறு விநோ­தமான முறையில் திரு­ம­ணத்தை நடத்தத் தீர்­மா­னித்­த­தா­கவும் கூறினார்.

 சீன வம்­சா­வ­ளி­யினத்தைச் சேர்ந்த ஜோசப்பும்  காங் திங்கும் கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் பதிவுத் திரு­மணம் செய்து கொண்ட நிலை­யில் இந்த வருடம் ஜன­வரி  24 ஆம் திகதி சீனப் புது­வ­ருட தினத்தை தமது குடும்­பத்­தி­ன­ருடன் கொண்­டாடும் முக­மாக சீனாவில் கொரோனா வைரஸ் வேக­மாக பரவி வரும் பிராந்­தி­ய­மா­க­வுள்ள ஹுபி மாகாணத்திற்குச் சென்றிருந்தனர்.

பின்னர் அவர்கள் அதற்கு சில நாட்கள் கழித்து ஜனவரி 30 ஆம் திகதி சிங்கப்பூருக்கு திரும்பியிருந்தனர்.

சிங்கப்பூரில்  28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று எற்பட்டிருப்பது அடையாளம் காணப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.