காங்­கே­சன்­துறை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு 50 ஏக்கர் நிலப்­ப­ரப்­பை   இலங்கை துறை­முக அதி­கார சபைக்கு பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு துறை­முக நட­வ­டிக்­கைகள்  அமைச்சர்  சமர்ப்­பித்த  யோச­னைக்கு  அமைச்­ச­ரவை  அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

காங்­கே­சன்­துறை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக துறை­மு­கத்­துக்கு அருகில் சுமார் 50 ஏக்கர் காணியை இலங்கை துறை­முக அதி­கார சபைக்கு   ஒப்­ப­டைக்கத்  திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

  துறை­மு­கத்­துக்கு அருகிலுள்ள 15 ஏக்கர் அர­சாங்­கத்­துக்கு சொந்­த­மான காணி ஒன்றை 52 மில்­லியன் ரூபா செலுத்­தப்­பட்­ட­மைக்கு அமை­வாக பொறுப்­பேற்­ப­தற்கும்  தனியார் உரித்­து­டை­மையின் கீழ் மேலும் 32 ஏக்கர் காணிக்கு இழப்­பீட்டை செலுத்தி காணியை பெற்­றுக்­கொள்ளும் சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக பொறுப்பேற்பதற்கும்  அரசாங்கம் தீர்மானித்துள்ளது.