கொழும்பு 09 இல் அமையவுள்ள Mulberry Residence வீடமைப்புத்திட்டம் எளிமையான, தரம் மற்றும் நிலையாண்மை ஆகியவற்றை மாற்றியமைக்கும் வகையிலமைந்த குடிமனைத் தொடராக அமையவுள்ளது;, மூன்று வீடமைப்புத் தொகுதிகளுடன்கூடிய  வகையில் இந்த வீட்டுத்தொடர்மனை அமையவுள்ளது. ஒவ்வொரு வீடமைப்புத் தொகுதியிலும் பதினைந்து  மாடிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அவற்றில் கீழ் தளத்திலிருந்து முதல் இரு மாடிகளும் வாகனதரிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமையவுள்ளன. 11 மாடிகளில் (3ஆம் மாடி முதல்– 13ஆம் மாடிவரை) குடியிருப்புகளை கொண்டமையவுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இவ் குடியிறுப்புதொகுதியின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிமனைகள் 1000–16000 சதுர அடிபரப்புகளை கொண்டமையவுள்ளதுடன், 2–3 படுக்கையறைகளை கொண்டமையவுள்ளன. போதியளவு இடவசதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த குடிமனைகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த குடியிருப்புத் தொகுதி நிர்மான செயற்பாடுகள் Yanjian Group நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலையிலும், நிர்மாணப் பணிகளை பார்வையிடக்கூடிய வசதிகளும் வழங்கப்படும்.

இந்தசெயற்திட்டம் தொடர்பில் Steradian Capital இன் பணிப்பாளர் ஹார்டி ஜமால்தீன் கருத்து தெரிவிக்கையில், எமது நிர்மாணப்பங்காளராக் Yanjian Group கொண்டிருப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்;ச்சியடைகிறோம். இலங்கையில் முன்னெடுக்கப்படும் சில பிரதான நிர்மாணப் பணிகளுக்கு இவர்கள் பொறுப்பாக காணப்படுகின்றனர். அதிகளவு சனத்தொகை செறிந்து காணப்படும் பகுதிகளிலிருந்து காணிகளை தெரிந்தெடுத்து, அப்பகுதி சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்த பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளோம்”என்றார்.

Mulberry Residence என்பது சிறந்த இணைப்பைக் கொண்டுள்ளது. இது அமையவுள்ள பிரத்தியேகமான இடம் என்பது, அதில் வசிப்போருக்கு சகல வசதிகளையும் வழங்கவுள்ளது. குறிப்பாக பாடசாலைகள், சுப்பர்மார்க்கெட்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிலையங்கள் போன்றன மிகவும் அருகாமையில் அமைந்துள்ளன. இந்தகுடிமனைத்தொடரில் வழங்கப்படும் பொதுவான வசதிகளில், வீடொன்றுக்கு அவசியமான அடிப்படை விடயங்களை முதலாவதாக ஏற்படுத்துவது அமைந்துள்ளது.

நுழைவு பகுதிகளிலும், வாகன தரிப்பிடங்களிலும் 24 மணிநேர CCTV கமரா கண்காணிப்புகள் நிறுவப்படும். மாடி பகுதியில் களியாட்ட நிகழ்வுகளுக்கான இடவசதி அமையவுள்ளதுடன், காணி வசதி மற்றும் சிறுவர்களுக்கு விளையாடக்கூடிய பகுதி போன்றன அமையவுள்ளன. இதற்கு மேலாக, இரு மொட்டைமாடி நீச்சல் தடாகங்களும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேகமாக உடற்பயிற்சி  நிலையங்களும்  அமையவுள்ளன.