கடந்த சில வருடங்களாக தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டதும் இறுதியாக அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட 1,000 ரூபா வேதனத்தால் பெருந்தோட்டக் கைத்தொழிலுக்கு அழிவுநிலை ஏற்படுமோ என பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் (RPC) நம்பிக்கையிழந்துள்ளன. சிறிய தோட்ட உரிமையாளர்கள் விசேடமாக தென் பிராந்தியத்திலுள்ளவர்கள் மீள நட்டு தோட்டத்தை சிறந்த முறையில் பராமரித்து வருகின்றனர். அவர்களைப் போலல்லாது ஆகக் குறைந்தளவு முதலீடு செய்து கொழுந்தைப் பறித்து தேயிலை உற்பத்தி செய்து தோட்டங்களை முழுமையாக RPC புறக்கணிப்பதால் தேயிலைக் கைத்தொழில் சில வருடங்களில் தானாகவே அழிந்துவிடும். தென்னிலங்கையில் விளைச்சல் ஹெக்டர் ஒன்றுக்கு 2300 கிலோ அதே வேளை RPC தோட்டங்களில் ஹெக்டர் ஒன்றின் விளைச்சல் 1000 கிலோ ஆகும். சிறுதோட்ட உற்பத்தியாளர்களுக்கும் RPCக்குமிடையிலான மொத்த வருடாந்த உற்பத்தி விகிதம் 70:30 ஆக உள்ளது. இது வரலாற்றில் நிலைநாட்டப்பட்ட (30:70) என்ற உற்பத்தி விகிதத்தின் தலைகீழானதொன்றாகும்.
வேலையாட்கள் எப்போதும் பயிரை கொண்டுவரவே விரும்புவர். ஒருபோதும் இளம் தளிரை வேண்டுமென்று பறிக்காதிருக்கமாட்டார்கள். மற்றும் குறைந்தளவு தளிர்களையோ கொண்டுவரமாட்டார்கள். தென் மாகாணத்தில் தினசரி 24 இலிருந்து 26 கிலோ பறிப்பது வழமை. ஆனால், மலையகத்தில் பறிக்கப்படும் எடை 16 இலிருந்து 18கிலோ ஆகும். ஏனெனில், அங்கு பறிப்பதற்கு கொழுந்து இல்லை. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தோட்ட உரிமையாளர்கள் சங்க வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றுகையில் மஹேந்திர அமரசூரிய இவ்வாறு கூறினார். மனிதனால் உற்பத்தி செய்யப்படும்போது பல்வித சவால்களை எதிர்கொள்ள நேரிடும். முதலில் பயிரின் விளைச்சலை அதிகரிக்கும் வரை தோட்டத்தில் உள்ளதைவிட கூடுதலாக தொழிலாளிகள் அறுவடை செய்வர் என எதிர்பார்க்க முடியாது. எனினும் பெருந்தோட்டக்கைத்தொழில் சீர்கெட்டுப்போவதற்கான பொறுப்பு RPC ஐயே சாரும். இப்பிரச்சினைக்கு தர்க்க ரீதியான தீர்வாக அவர் கூறிய ஆலோசனை யாதெனில் பயிரின் உற்பத்தி திறனை பெருக்குவதாயின் தேயிலை மற்றும் ரப்பர் மரங்கள் மீள நடப்படவேண்டும் என்பதாகும்.
RPC கம்பனிகள் முதலீடு செய்து மீள் நட்டு பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் என்னும் எதிர்பார்ப்பில் 5000 இலிருந்து 7000 ஹெக்டார் விஸ்தீரணமுள்ள பெருந்தோட்டங்கள் வெறும் 100 மில்லியன் ரூபாவுக்கு RPCக்கு அரசாங்கத்தினால் விற்கப்பட்டது. ஆனால் கம்பனிகள் ஆகக் குறைந்த முதலீட்டிற்கு அறுவடையை மட்டும் பெற்று அவற்றை விற்பனை செய்து இலாபத்தை ஈட்டியது. அது மட்டுமன்றி அங்குள்ள மரங்கள் மற்றும் ஓட்டை உடைசல்களையும் விற்று பணமாக்கின.
தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் (TRI) பெருந்தோட்டத்தை தனியார் மயப்படுத்தி 10 வருடத்தின் பின் 2003ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்றைப்பற்றி ஆய்வாளர் ஆர்.கே. நாதனேல் 2005.01.-26ஆம் திகதி த ஐலன்ட் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட தனது கட்டுரையில் எழுதியுள்ளார். ஒவ்வொரு தோட்டங்களுக்கும் சென்று இவ் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இப் பத்து ஆண்டு காலத்தில் 0.07 வீதம் மட்டுமே மீள் நடுகை செய்யப்பட்டுள்ளது என கண்டுகொள்ளப்பட்டது. அன்றிலிருந்து RPC தோட்டங்களின் நிலைவரம் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. தேயிலைப் பற்றையொன்றின் பயன்தரும் வாழ்வு சீட்டிலிங் தேயிலைக்கு 50 வருடங்களும் VP தேயிலைக்கு 30 வருடங்களுமாகும். ஆகையால் மீள்நடுகை வருடமொன்றுக்கு 2 இலிருந்து 3 வீதம் வரை செய்யப்பட்டிருத்தல் வேண்டும். தமது 27 வருட முகாமைத்துவ காலத்தில் RPCகள் இவ் விகிதாசாரத்தை கடைப்பிடித்திருந்தால் அவர்கள் முகாமைத்துவம் செய்யும் தோட்டங்கள் 50 வீதத்தை விட அதிகமாக மீள் நடப்பட்டு விளைச்சல் அதிகரித்து தென்னிலங்கையைப் போல் வேலையாட்களும் ஆக்கவளமுடையவர்களாயிருந்திருப்பர்.
ஆர்.கே. நாதனேல் RPC தோட்டங்களிலுள்ள தேயிலைப் பற்றைகளின் வயது பற்றிய ஆய்விலிருந்து கீழ்வரும் தரவுகளை வழங்குகிறார்.
ஆதலால் மேற்குறிப்பிட்ட ஆய்வின் 20 வருடங்களின் பின்னரும் கூட RPC ஆனது மரணித்துக்கொண்டிருக்கும் தேயிலைப் பற்றைகளிலிருந்து இப்போதும் தளிர்களை கொய்து வருவதுடன் உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட ஊதியத்தை வேலையாட்கள் ஏற்றுக்கொள்வார்கள் என அது எதிர்பார்க்கிறது.
RPC நீண்டகாலமாக உற்பத்தி திறனை அடிப்படையாகக் கொண்ட ஊதியத்தை வழங்க வேண்டுமென வாதாடிக்கொண்டுவருகிறது. ஏனைய விடயங்கள் சமமாக இருப்பின் துண்டு கணக்கு நியாயமாயிருக்கும் என்பது கருத்தாகும். பற்றைகளின் அல்லது மரங்களின் வயது மற்றும் ஏனைய விவசாய உள்ளீடு மற்றும் நடவடிக்கைகளைப் பொறுத்து தோட்டத்திற்கு தோட்டம் அல்லது மலைக்கு மலை நிலைமை வேறுபடலாம். நிலைமைகளை கட்டுப்படுத்தக்கூடிய தொழிற்றுறையில் இது சாத்தியமாகலாம். ஏறத்தாழ 2 நூற்றாண்டு காலமாக பெருந்தோட்டத்தில் பணிபுரியும் வேலையாட்கள் தினசரி ஊதியத்தை பெற்றுவருவதோடு RPCயின் தவறினால் துண்டு கணக்கு முறையைப் பின்பற்றும்படி நாம் அவர்களை வற்புறுத்தலாகாது.
உண்மையில் பெருந்தோட்டத்துறை தேசிய சொத்தாகும். 70 களில் தேசியமயமாக்கப்பட்டதன் பின் அவைகளை முகாமைத்துவம் செய்யவும் மற்றும் வினைத்திறனான அபிவிருத்திக்கும் உட்படுத்த முடியாது எனத் தீர்மானித்து அந்நடைமுறையை மாற்றி அரசு மீண்டும் அவற்றை தனியார் கம்பனிகளுக்கு வழங்கியது. இலாபத்தை ஈட்டும் அதேவேளையில் பெருந்தோட்டத் துறைக்கு புத்துயிர் கொடுத்து சிறந்த நிலையில் பராமரிக்கும் என்ற நம்பிக்கையில் நாட்டு மக்கள் பெருந்தோட்டங்களை RPC இடம் கையளித்தனர். துரதிஷ்டவசமாக தற்போது அவர்கள் பெருந்தோட்டத்துறையை அழிவின் விளிம்புக்கு கொண்டுவந்து விட்டனர்.
இராமையா யோகராஜன் ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.க. மற்றும் ஐ.நா. தொழிற்சங்கவாதியும் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM