பொஷன் உற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும்   அதிகாரிகளுக்கு தங்குவதற்கான இடங்களை ஏற்படுத்தி கொடுப்பதற்காக  வடமத்திய மாகணத்தில் உள்ள 13 பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

அதன் பிரகாரம்,  அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலையில் உள்ள 13 பாடசாலைகள்    எதிர்வரும்  16 ஆம் திகதி முதல்  22 ஆம் திகதி வரை மூடப்படும் என வடமத்திய மாகண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் மத்திய வித்தியாலயம், அநுராதபுரம் சுவர்ணபாலி மகளிர் வித்தியாலயம், புனித ஜோசப் வித்தியாலயம்,  விவேகானந்த மகா வித்தியாலயம், வலிசிங்ஹ ஹிரிச்சந்திர மகா வித்தியாலயம், நிவந்தக்க சேத்திய வித்தியாலயம், மகா போதி வித்தியாலயம்,   தந்திரிமலை கொணவிமல மகா வித்தியாலயம், மிஹிந்தலை மகா வித்தியாலயம், மிஹிந்தலை கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் மிஹிந்தலை கமலக்குளம் வித்தியாலயம்   உள்ளிட்ட பாடசாலைகள்   மூடப்பட்டுள்ளன.