சுகாதார பிரிவின் சிறந்த செயற்பாடுகளே கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தியுள்ளது : சுகாதார அமைச்சர் 

Published By: R. Kalaichelvan

06 Feb, 2020 | 09:29 PM
image

(செ.தேன்மொழி)

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எமது மகிழ்ச்சியை தெரிவிப்பதுடன் சுகாதார பிரிவின் சிறந்த செயற்பாட்டின் காரணமாகவே கொரோனா வைரஸை எமக்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளது என்று தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி , இன்று சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதாகவும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு எமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்று சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதனால் கொரோனா வைரஸிடமிருந்து நாட்டை பாதுகாக்க கூடியதாகவுள்ளது.

சீனர்களின் வருகையை சில நாடுகள் தடுத்திருந்த போதும், இலங்கைக்கான சீன தூதரங்கமும் இந்த விடயம் தொடர்பில் அறிவித்திருந்த போதும் , இலங்கையில் அவர்களுக்கு தடைவிதிக்கப்படவில்லை. சீனாவுடன் இலங்கை நீண்டகாலமாக நட்பை பேணிவருகின்றது.இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் சீன தூதரங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இருந்த போதும் சீனர்கள் தொடர்ந்தும் வருகை தந்தனர். இந்நிலையில் இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் சீன தூதரங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

வைரஸ் தாக்கத்தை கருத்திற்கொண்டு விமானநிலையம் மற்றும் துறைமுகங்களில் சுகாதார பாதுகாப்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விமான பயணிகளுக்கு விண்ணப்பங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டு விபரங்கள் எடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களை தெளிவூட்டும் துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்த பிரசுரங்களில் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பிலும் இணையத்தின் ஊடாக தகவல்கள் அனுப்பப்பட்டுவருகின்றன. இதனால் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள வெளிநாட்டவர் தொடர்பில் அந்த பகுதியிலுள்ள சுகாதார பிரிவுகள் விளக்கம் பெறுவதுடன் , அவர்கள் தொடர்பான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளவும் வசதியாக உள்ளன.

இந்நிலையில் கரையோரப் பகுதிகளிலும் வைரஸ் பரவாதிருக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14