(ஆர்.விதுஷா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன்  தொடர்புபட்ட  பிரதான  சூத்திரதாரிகளுடன்  இணைந்து   கூட்டணியமைப்பதன் ஊடாக  பொதுத்  தேர்தலில்  வெற்றிகாணும்  முயற்சியில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  இறங்கியுள்ளதாக  ஐக்கிய தேசிய கட்சியின்  பதுளை  மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினர்  சமிந்த  விஜேசிறி  குற்றஞ்சாட்டியுள்ளார்.  

எதிர்க்கட்சி  தலைவர்  காரியாலயத்தில்  இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்  போது  இவ்வாறு குற்றச்சாட்டை  முன்வைத்த அவர்  மேலும் கூறிதாவது  ,  

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன்   தொடர்புடையவர்களுக்கு   தண்டனையை  பெற்றுக்கொடுப்பதாகக் கூறிக்கொண்டே  இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.இந்நிலையில்   எதிர்பார்ப்புக்களை  நிறைவேற்றுவார்கள்  என நம்பி 69 இலட்சம்  மக்கள் அவர்களுக்கு  வாக்களித்தனர்.   

அரசாங்கம்  மக்களுக்கு  கொடுத்த வாக்குறுதியை  மறந்து  உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன்  தொடர்புபட்ட  பிரதான  சூத்திரதாரிகளுடன்  இணைந்து   கூட்டணியமைப்பதன் ஊடாக  பொதுத் தேர்தலில்  வெற்றிகாண  பொதுஜன பெரமுன  நினைக்கின்றது எனத் தெரிவித்தார்.