(எம்.எப்.எம்.பஸீர்)

புத்தளம், வனாத்துவில்லு பகுதியில் அமையப்பெற்றிருந்த பயங்கரவாதி சஹ்ரான் ஹஷீமின் பயிற்சி முகாமில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பொலேரோ ரக கெப் வண்டியொன்றினை மாவனெல்லையில் வைத்து சி.ஐ.டி.யினர் மீட்டுள்ளனர்.  

வனாத்துவில்லு பயிற்சி முகாம் தொடர்பில் சி.ஐ.டி. முன்னெடுக்கும் விஷேட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய, இந்த கெப் வண்டி நேற்று மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த கெப் வண்டி வனாத்துவில்லு பயங்கரவாத முகாமிலிருந்து வெடி பொருட்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவும் குறித்த முகாமுக்கு தேவையான மூலப் பொருட்களை கொண்டுவரவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என  சந்தேகிக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சி.ஐ.டி.) அது குறித்த மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.