(நா.தனுஜா)

அரச ஊழியர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட சேவைகளுக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் செலுத்துவது எந்தவொரு அரசாங்கத்தினதும் பொறுப்பாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய, தேவையற்ற தாமதங்களினால் பொருளாதாரம் மேலும் பலவீனமடைவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அரச சேவையாளர்களுக்கான நிலுவையிலுள்ள கொடுப்பனவுகளை வழங்குவதைப் புதிய அரசாங்கம் தாமதித்து வருவதாக எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

'பெற்ற சேவைகளுக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் செலுத்துவது எந்தவொரு அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். தேவையற்ற தாமதங்களின் காரணமாக, பொருளாதாரம் மேலும் பலவீனமடைகிறது.

அதனால் ஏழைகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பொருளாதாரத்திற்கு வலுவூட்டுவது சட்டமியற்றுபவர்களின் பொறுப்பாகும்.