(எம்.ஆர்.எம்.வஸீம்)

தமிழர்களின் காணிகளை அபகரிப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல. எவரும் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் வகையில் செயற்பட்டால் அதுதொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்சுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வவுனியா, தச்சங்குளத்தில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் வகையில் இனவாதச் செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதாக சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.