வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு  தேவையான  அனைத்து வைத்திய சான்றிதழ் களையும் அரச வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள கூடிய கட்டமைப்பை உருவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் பிரதான வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட வைத்தியசாலைகள் 150 இல்  இந்த திட்டத்தை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று அரசாங்க தகவல் தினைக்களத்தில்இடம்பெற்ற போதே மேற்கண்ட விடயம் குறித்து அறிவிக்கப்பட்டது. 

ஆகையால் வைத்தியசாலைகளில் குறித்த வைத்திய சான்றிதழ்களை பெறும் பயனாளர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து பரிசீலனையும் செய்துகொள்ள முடியாதுள்ளது.

இதன் காரணமாக அரச வைத்தியசாலைகளில் குறித்த பரிசீலனைக்காக தனியொரு கட்டமைப்பு மூலம் மேற்கொள்வது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது . 

அது தொடர்பாக தேசிய போக்குவரத்து வைத்திய நிலையத்தின்  நடவடிக்கையினூடாக அரச வைத்தியசாலையில் பயனாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளும் வைத்திய சான்றிதழ்கள் வழங்குவதற்கும்  அனைத்து சேவைகளையும்  ஒரே இடத்தில் வழங்குவதற்காக அரச வைத்தியசாலையில் வசதிவாய்ப்புக்கள் மற்றும் ஒன்றாக அமைப்பதற்காக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சரினூடாக அமைச்சரவையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.