ஒருதொகை மதுபான போத்தல்களுடன் மூவர் கைது

Published By: Daya

06 Feb, 2020 | 05:21 PM
image

சட்டவிரோதமான முறையில் இத்தாலியிலிருந்து  ஒரு தொகை மதுபான போத்தல்களை இலங்கைக்குக் கொண்டுவந்து விற்பனை செய்ய முற்பட்ட மூன்று சந்தேகநபர்கள் மதுவரி திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மது வரித் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்  குபுக்க  ஒபேசேக்கர புர, பண்டாரகம ஆகிய பகுதிகளில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே வெளிநாட்டு மதுபான போத்தல்களை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இத்தாலியிலிருந்து கடத்தி வந்த 48 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் இவ்வாறு சிக்கியுள்ளன. இதன் பெறுமதி சுமார் 3 இலட்சம்  ரூபா என மது வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் இம்மாதம் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் கொரணை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு மதுபானங்களைக் கொண்டு வரும் போது சுங்கவரி திணைக்களத்தால் வரி அறவிட்ட பின் குறித்த போத்தல்களுக்கு ஒரு சிறப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

ஆனால் மதுவரித் திணைக்களத்தினால் சோதனை செய்தபோது எவ்விதமான ஸ்டிக்கர்களும் குறித்த மதுபான போத்தல்களுக்கு ஒட்டப்படவில்லை என தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மதுவரி திணைக்களதினால் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்