நீண்ட விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு நசாவிற்கு சொந்தமான விண்கலம் ஒன்றில் மூன்று விண்வெளி வீரர்கள் இன்று காலை பூமிக்கு திரும்பியுள்ளனர்.

328 நாட்கள் தமது விண்வெளி சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்துள்ள நிலையில் இன்று அவர்கள் மூவரும் பூமிக்கு திரும்பியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு விண்வெளி வீராங்கனையான கிறிஸ்டினா கோச் இன்று பூமிக்குத் திரும்பும் மூன்று விண்வெளி வீரர்களில் ஒருவராவார்.

இவர் மிக நீண்டகாலமாக விண்வெளி சுற்றுவட்டப்பாதை ஆய்வகத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஒரு பெண் வீராங்கனையாக உள்ளார்.

அத்தோடு பூமியின் 5,248 சுற்றுப்பாதைகளை நிறைவு செய்துள்ள அவர் , 139 மில்லியன் மைல்கள் பயணம் செய்துள்ளார். இது நிலவுக்கு சுமார் 291 சுற்று பயணங்களுக்கு மேற்கொள்வதற்கு சமமானதாகும்.

அத்தோடு இன்று காலை 9.12 மணியளவில் கஸகஸ்தானில் உள்ள சோயுஸ் விண்கல நிலையத்தில் அவர்கள் மூவரும் தரையிறங்கியுள்ளனர்.

அதேவேளை  கிறிஸ்டினா கோச்சை வரவேற்கும் முகமாக அப்பகுதியில் மக்கள் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.