வவுனியா நெடுங்கேணி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பஸ் நடத்துனர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், 

முல்லைதீவில் இருந்து வவுனியா நோக்கிசென்ற தனியார் பஸ் நெடுங்கேணி நொச்சியடி ஜயனார் ஆலயத்தில் வழிபாட்டிற்காக நிறுத்தப்பட்டது. 

இதன்போது பஸ் நடத்துனர் ஆலயத்தின் உண்டியலில் பணத்தினை இடுவதற்காக வீதியை கடந்து சென்றபோது திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் அவரை மோதியது.

விபத்தில் பஸ்ஸின் நடத்துனர் காயமடைந்த நிலையில் நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து தொடர்பாக நெடுங்கேணி போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

--