தென் மற்றும் சப்ரகமுவ மாகணங்களில் பல பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டதாக   இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

குறித்த மின் தடையானது  சுமார் 40 நிமிடங்கள்  நீடித்துள்ளது.

லக்ஷபான   மின் விநியோக பாதையில் மரமொன்று சரிந்து வீழ்ந்ததிலேயே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சுமார் 40 நிமிடங்களின் பின்னர் மின்சாரம் மீண்டும் வழமை  நிலைக்கு திரும்பியுள்ளது.