இத்தாலியின் லோடி மாகாணத்தில் வியாழக்கிழமை அதிகாலை அதிகவே ரயில் ஒன்று தடம் புரண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலிக்கு வடக்கே மிலனுக்கு அருகிலுள்ள காசல்பஸ்டர்லெங்கோ என்ற நகரிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக 28 பேர் காயமடைந்ததுடன், ரயிலின் இரண்டு நடத்துனர்கள் உயிரிழந்துள்ளதாக  இத்தாலிய தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தினால உண்டான சேத விபரங்கள் தொடர்பான மதீப்பீட்டு பணிகளை அவசரக் குழுக்களம், தீயணைப்பு வீரர்களும் முன்னெடுத்துள்ளனர்.