ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியின் செயற்­கு­ழுக்­கூட்டம்  எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில்  சிறி­கொத்­தாவில் நடை­பெ­ற­வுள்­ளது.செயற்­கு­ழு­க் கூட்டம் இன்று வியா­ழக்­கி­ழமை நடை­பெறும் என்று முன்னர்  அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.  ஆனால்  இந்­தக்­கூட்டம் திங்­கட்­கி­ழ­மைக்கு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது.

கடந்த செயற்­கு­ழுக்­கூட்­டத்தில்  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­வ­ராக  ரணில் விக்­கி­ர­ம­சிங்க  தொடர்­வது என்றும்  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின்  பொது கூட்­ட­ணியின்  தலை­வ­ரா­கவும்   பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ரா­கவும் சஜித் பிரே­ம­தா­ஸவை  நிய­மிப்­பது எனவும்  தீர்­மா­னிக்­கப்­பட்­டது.  

 இந்­தக்­கூட்­டத்தில்  சஜித் அணி­யினர்  பங்­கேற்­கா­த­போ­திலும்   பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­க­ளான மங்­கள சம­ர­வீர, மலிக் சம­ர­விக்­கி­ரம ஆகியோர்   பங்­கேற்­றி­ருந்­தனர்.   கூட்­டத்தில்  எடுக்­கப்­பட்ட  முடி­வுக்­கி­ணங்க பொதுக்­கூட்­ட­ணியின்  செய­லாளர் ஒரு­வரை ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில் நிய­மிப்­ப­தற்கும் இணக்கம் காணப்­பட்­டது.   இதற்­கி­ணங்க தற்­போது  ரஞ்சித் மத்­தும பண்­டா­ரவை   செய­லா­ள­ராக நிய­மிப்­ப­தற்கு  சஜித் அணி  முடி­வு­செய்­துள்­ளது.

இந்த விடயம் தொடர்பில் கட்­சியின் செயற்­கு­ழுவின்  அங்­கீ­கா­ரத்தை தற்­போது பெற­வேண்­டி­யுள்­ளது.  இன்­றைய தினம்  செயற்­குழு கூடும்­போது இந்த விடயம் தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வி­ருந்­தது.  ஆனாலும்   செயற்­கு­ழுக்­கூட்டம் திங்­கட்­கி­ழ­மைக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் அன்­றைய தினம் இவ்­வி­டயம் தொடர்பில் ஆரா­யப்­படும் என்று   தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின்  பாரா­ளு­மன்­றக்­கு­ழுக்­கூட்­டத்தில்  பொதுக்கூட்டணியின்  செயலாளராக  மத்தும பண்டார நியமிக்கப்பட்டமைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்  பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற   கூட்டத்திலேயே இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது.